This Article is From Sep 26, 2018

“திமுக கட்சியல்ல; கம்பெனி” - முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு

“ அதிமுகவை உடைக்க திமுக முயற்சி செய்தது. அதில் வெற்றி கிடைக்கவில்லை” என்று சேலம் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனி சாமி பேசியுள்ளார்.

Advertisement
தெற்கு Posted by

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் ஆளும் அதிமுக மற்றும் திமுக கட்சி தலைவர்கள் சமீப காலமாக கடும் விமர்சனங்களை கூறி வருகின்றனர். சேலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனீசாமி பேசியதாவது-
திமுகவில் ஸ்டாலின் எம்.எல்.ஏ. ஆனதற்கு காரணம் கருணாநிதிதான். ஆனால் அதிமுகவில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தங்களது கடும் உழைப்பால் உயர் பதவிகளை அடைந்தனர். திமுக தலைவர்களின் பிள்ளைகள் சிலர்தான் முக்கிய பதவிகளை கட்சியில் வகித்து வருகின்றனர். திமுக என்பது கட்சியல்ல. அது ஒரு கம்பெனி. எங்களை கோழை என்று திமுகவினர் கூறுகிறார்கள். நாங்கள் கோழைகள் அல்ல. நாங்கள் மக்களுக்கு நல்லது செய்ய விரும்புகிறோம். ஆனால் எங்களது கட்சியை உடைக்க திமுக முயற்சி செய்கிறது. ஆனால் அது நடக்கவில்லை. நாங்கள் ஏதும் தவறு செய்யவில்லை. எனவே எந்த புகாரையும் குறித்து நாங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு முதல்வர் பேசினார்.

கம்பெனி என்று திமுகவை கூறியதற்கு அதன் தலைவர் மு.க. ஸ்டாலின் அளித்த ஒரு பேட்டியில், மிகவும் தரம் தாழ்ந்த கருத்தை முதல்வர் கூறியதாக விமர்சித்துள்ளார்.
 

Advertisement