This Article is From Jun 05, 2020

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம்? மருத்துவமனை கூறியது என்ன?

குரோம்பேட்டை ரிலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலில் அவருக்கு சாதாரண நிலையில் ஆக்ஸிஜன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம்? மருத்துவமனை கூறியது என்ன?

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம்? மருத்துவமனை கூறியது என்ன?

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

61 வயதாகும் ஜெ.அன்பழகன் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினர் ஆவார். கடும் மூச்சுத் திணறல் காரணமாக அவர், குரோம்பேட்டை அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே நேற்று மாலை மருத்துவமனை தரப்பில் அன்பழகனின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிடப்பட்டது. 

அதில், 02-06-2016 அன்று ஜெ.அன்பழகன் குரோம்பேட்டை ரிலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலில் அவருக்கு சாதாரண நிலையில் ஆக்ஸிஜன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது அவருக்கு 80 சதவீத ஆக்ஸிஜன் வென்டிலேட்டர் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 24 மணிநேரமாக ஜெ.அன்பழகனின் உடல்நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், ஜெ.அன்பழகனின் உடல்நிலை குறித்து தனியார் மருத்துவமனை நிர்வாகம் இன்று காலை தெரிவித்துள்ளதாவது, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

வென்டிலேட்டர் மூலம் 80% ஆக்சிஜன் செலுத்தப்பட்ட நிலையில், 67% மட்டுமே இன்று தேவைப்படுகிறது என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.