This Article is From Oct 16, 2019

''அப்துல் கலாமை கிண்டலும், கேலியுமாக பேசியது திமுக'' - அமைச்சர் ஜெயக்குமார் விளாசல்!!

தமிழகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளுக்கு 21-ம்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது. வாக்குகள் 24-ம்தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

Advertisement
தமிழ்நாடு Posted by

இடைத்தேர்தல் நடைபெறும் இரு தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் தீவிரம் அடைந்திருக்கிறது.

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அவரை கேலியும் கிண்டலும் செய்த கட்சி திமுக என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். 

தமிழகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளுக்கு 21-ம்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது. வாக்குகள் 24-ம்தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இதையொட்டி திமுக, அதிமுக தலைவர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

நாங்குநேரி தொகுதியில் அதிமுகவுக்கு அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவு திரட்டினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் திமுகவை கடுமையாக விமர்சித்தார். அவர் கூறியதாவது-

அப்துல் கலாம் ஐயா அவர்கள் மீண்டும் இந்தியாவின் குடியரசு தலைவராக வரவேண்டும் என்று முன்மொழிவு ஏற்பட்டபோது, அன்றைக்கு அந்த முன்மொழிவுக்கு ஆதரவு தந்தவர் ஜெயலலிதா. 

Advertisement

ஆனால் அன்றைக்கு திமுகவிடம் ஆதரவு கேட்டபோது ஐயா அப்துல் கலாமை, கிண்டலாக கேலியுமாக பேசியதெல்லாம் நிச்சயமாக தமிழ்நாட்டு மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். 

அன்றைக்கு மகாராஷ்டிராவில் இருந்து குடியரசு தலைவர் பதவிக்காக பிரதீபா பாட்டீலை காங்கிரஸ் நிறுத்தியபோது, திமுக ஆதரவு அளித்தது. நம்முடைய தமிழ்நாட்டை சேர்ந்த ஐயா அப்துல் கலாமை திமுக ஆதரிக்கவில்லை. 

Advertisement

இஸ்லாமிய உணர்வையும் மதித்து, பரந்த மனப்பான்மையுடன் அப்துல் கலாம் மீண்டும் குடியரசு தலைவராக வருவதற்கு ஜெயலலிதா ஆதரவு கொடுத்தார். இஸ்லாமியர்கள் பற்றி அதிகம்பேசும் திமுக, ஏதோ அவர்கள்தான் உள்ளன்போடு இஸ்லாமியர்களுடன் உறவு வைத்திருப்பதாக மாயையை ஏற்படுத்தியுள்ளது. 

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் பேசினார். 
 

Advertisement