This Article is From Sep 29, 2018

முதல்வருக்கு எதிராக ‘அவதூறான’ பேச்சு: எம்.எல்.ஏ உட்பட 7 பேர் மீது வழக்கு!

திமுக எம்.பி மற்றும் எம்.எல்.ஏ உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது

முதல்வருக்கு எதிராக ‘அவதூறான’ பேச்சு: எம்.எல்.ஏ உட்பட 7 பேர் மீது வழக்கு!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டு, திமுக எம்.பி மற்றும் எம்.எல்.ஏ உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திமுக-வின் அமைப்புச் செயலாளரும் ராஜ்யசபா எம்.பி-யுமான ஆர்.எஸ்.பாரதி, திமுக-வின் சிங்கநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ கார்த்திக், கோவை மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர், பேரூரில் நடந்த கட்சி நிகழ்ச்சியில், முதல்வருக்கு எதிராக அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதையடுத்து சமூக அமைதியை குலைக்கும் வகையில் பேசியது, இரு பிரிவினருக்கு இடையில் மோதலை தூண்டும் வகையில் பேசியது ஆகிய குற்றச்சாட்டுகளுக்குக் கீழ் 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

.