This Article is From Sep 05, 2020

ரஜினிகாந்த வாழ்த்துவதால் எந்த வரவும் இல்லை: ஆர்.எஸ் பாரதி

திமுகவில் முக்கிய பொறுப்புகளில் பதவியேற்றிருக்கும் துரைமுருகனுக்கும், டி.ஆர். பாலுவுக்கும் ரஜினிகாந்த் வாழ்த்தி தெரிவித்துள்ளதாக திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி கூறியுள்ளார். 

ரஜினிகாந்த வாழ்த்துவதால் எந்த வரவும் இல்லை: ஆர்.எஸ் பாரதி

திமுகவில் பொதுச்செயலாளராக இருந்த அன்பழகனின் மறைவுக்குப்பின் அப்பதவி காலியாக இருந்தது. இதனையடுத்து அந்தப் பதவிக்கு பொருளாளராக இருந்த துரைமுருகன் போட்டியிடுவதற்காக, பொருளாளராக பதவியை ராஜினாமா செய்தார். இதனால் இருபதவிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், கடந்த வியாழனன்று திமுக பொருளாளர் பதவிக்கு டி.ஆர். பாலுவும், பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகனும் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, டி.ஆர் பாலுவின் வேட்புமனுவைப் பெற்றுக்கொண்டார். 

மாலை 4 மணியோடு வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்தது. மற்றவர்கள் யாரும் போட்டியிடாததால், திமுகவின் பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் தேர்வு செய்யப்பட்டனர்.


இந்த நிலையில், திமுகவில் முக்கிய பொறுப்புகளில் பதவியேற்றிருக்கும் துரைமுருகனுக்கும், டி.ஆர். பாலுவுக்கும் ரஜினிகாந்த் வாழ்த்தி தெரிவித்துள்ளதாக திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.எஸ் பாரதி கூறுகையில், 'துரைமுருகனும், டி.ஆர் பாலுவும் ரஜினிக்கு நண்பர்கள். எனவே, நண்பர் என்ற முறையில் ரஜினி வாழ்த்தியுள்ளார். இதில் எந்த அரசியலும். அவர் வாழ்த்தியதால் எந்த வரவும் இல்லை, வாழ்த்தாமல் இருந்தாலும் எந்த செலவும் இல்லை'. இவ்வாறு தெரிவித்துள்ளார்

.