This Article is From Jan 19, 2019

கொடநாடு விவகாரத்தின் பின்னணியில் திமுக உள்ளது: எடப்பாடி குற்றச்சாட்டு

கொடநாடு விவகாரத்தின் பின்னணியில் திமுக உள்ளது என்றும் சயான், மனோஜை ஜாமீனில் எடுத்தது திமுக தான் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisement
தமிழ்நாடு Posted by

சென்னை காட்டுப்பாக்கம் பகுதியில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்தகொண்டு பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி,

இரண்டாக பிரிந்த கம்யூனிஸ்ட் கட்சி கூட ஒன்று சேரவில்லை, ஆனால் எம்.ஜி.ஆர் மறைவின்போது உடைந்த இயக்கத்தை ஒன்றாக சேர்த்தவர் ஜெயலலிதா தான். சட்டமன்றத்தில் ஜெயலலிதாவை அவமதித்த நிகழ்வு திமுக ஆட்சியில் தான் நடைபெற்றது. இப்படி பல சோதனைகளை கடந்துதான் ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பேற்றார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் கொடநாடு தனியார் கட்டுப்பாட்டில் உள்ளது. கொடநாடு சம்பவம் கூலிப்படையால் செய்யப்பட்டது. கொடநாடு விவகாரத்தின் பின்னணியில் திமுக உள்ளது என்றும் சயான், மனோஜை ஜாமீனில் எடுத்தது திமுக தான். வாலையாறு பகுதியை சேர்ந்த மனோஜ் மீது கேரளாவில் கொலை வழக்கு உள்ளது. கேரளாவை சேர்ந்த கூலிப்படையினர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கொடநாடு விவகாரத்தில் திட்டமிட்டு திமுக நடத்தும் நாடகத்தை சட்டப்படி தவிடுபொடியாக்கி காட்டுவேன். ரூ.1000 பொங்கல் பரிசு கொடுத்ததால் பொறுக்க முடியாமல் பொய் வழக்குகளை ஜோடிக்கின்றனர்.

Advertisement

கொடநாடு விவகாரத்தில் ஆதாரம் இருந்தால் சசிகலா குடும்பத்தினர் எங்களை சும்மா விடுவார்களா? இவை எதற்கும் நான் அஞ்ச மாட்டேன். எனது கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை அதிமுகவில் தான் இருப்பேன் என்று அவர் கூறினார்.

Advertisement