This Article is From Jan 24, 2020

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு: உச்ச நீதிமன்றம் வைக்கும் செக்!!

பல மாதங்களாக எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்த வழக்கு சூடுபிடிக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் பரபரக்கத் தொடங்கியுள்ளன

Advertisement
இந்தியா Written by

இன்னும் ஓராண்டில் தமிழகத்திற்கு சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், இந்த வழக்கின் போக்கு அதில் மிகப் பெரிய தாக்கம் ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது. 

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் 10 அதிமுக எம்எல்ஏ-க்கள், கடந்த 2017 ஆம் ஆண்டு, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசுக்கு எதிராக தமிழக சட்டசபையில் வாக்களித்தனர். அப்போது ஓபிஎஸ் தலைமையில் 11 எம்எல்ஏ-க்களும் எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி, தன்னிச்சையாக செயல்பட்டு வந்தனர். பின்னர் இரு தரப்பும் இணைந்தது. அதன் தொடர்ச்சியாகத்தான் ஓபிஎஸ்-ஸுக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட்டது.

இந்த மொத்த விவகாரத்தில் தமிழக எதிர்க்கட்சியான திமுக, “2017 சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏ-க்கள் தங்கள் கட்சியின் கொறடாவின் உத்தரவை மதிக்காமல் செயல்பட்டனர். எனவே, இவர்களை கட்சித் தாவல் சட்டத்திற்குக் கீழ் தண்டித்து, அவர்களின் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளைப் பறிக்க வேண்டும்,” என்று உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. பல மாதங்களாக இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

திமுக தரப்பில், வழக்கை விரைந்து விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்ஏ பாப்டே தலைமையிலான நீதிமன்ற அமர்விடம் முறையிடப்பட்டது. வாதங்கள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, ‘வழக்கை விரைந்து விசாரிக்கப் பார்க்கிறோம்,' என்று உறுதியளித்துள்ளனர் நீதிபதிகள்.

Advertisement

இதனால், பல மாதங்களாக எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்த வழக்கு சூடுபிடிக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் பரபரக்கத் தொடங்கியுள்ளன. இன்னும் ஓராண்டில் தமிழகத்திற்கு சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், இந்த வழக்கின் போக்கு அதில் மிகப் பெரிய தாக்கம் ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது. 
 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement