This Article is From Sep 13, 2018

வைரல் வீடியோ: பியூட்டி பார்லரில் புகுந்து பெண்ணை தாக்கிய திமுக முன்னாள் கவுன்சிலர்

கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாக கூறி அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்

வைரல் வீடியோ: பியூட்டி பார்லரில் புகுந்து பெண்ணை தாக்கிய திமுக முன்னாள் கவுன்சிலர்

பெண்ணை எட்டி உதைத்த செல்வகுமாரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • உதை வாங்கும் பெண்ணை மீட்க மற்ற பெண்கள் முயற்சித்தனர்
  • சம்பவம் மே மாதம் நடந்துள்ளது – வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது
  • தாக்கப்பட்ட பெண் ரூ. 5 லட்சம் கடன் வாங்கியிருந்தார் : போலீஸ்
Chennai:

பெரம்பலூர் மாவட்டத்தில் முன்னாள் திமுக கவுன்சிலர் ஒருவர் பியூட்டி பார்லருக்குள் புகுந்து அங்குள்ள பெண் ஒருவரை சரமாரியாக தாக்கும் காட்சி வைரலாகி வருகிறது. பியூட்டி பார்லரில் உள்ள சிசிடிவி கேமராவில் இந்த காட்சி பதிவாகியுள்ளது.

செல்வகுமார் என்ற அந்த நபர் பியூட்டி பார்லரில் புகுந்து ஒரு பெண்ணை காலால் எட்டி உதைத்துக் கொண்டே இருக்கிறார் 37 வினாடிகள் ஓடும் அந்த காட்சியில் சுமார் 10 தடவைக்கும் மேலாக பெண்ணை அவர் மிதிக்கிறார். அவரிடமிருந்து தாக்கப்படும் பெண்ணை மீட்க சக பணியாளர்கள் முயற்சிக்கின்றனர். அவர்களை செல்வகுமார் மிரட்டுவது போன்று காட்சிகள் அமைந்துள்ளன. இந்த வீடியோ மே மாதம் 25-ந்தேதி பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், சம்பந்தப்பட்ட பெண் ரூ. 5 லட்சத்தை செல்வ குமாரிடம் வாங்கியுள்ளார். அதனைக் கேட்டு செல்வகுமார் தாக்கியுள்ளார். இதுசம்பந்தமாக வழக்குப்பதிவு செய்துள்ளோம் என்றனர்.

வீடியோ காட்சி வைரலாகி வரும் நிலையில் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தியதாக கூறி செல்வகுமாரை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து திமுக நீக்கியுள்ளது.

.