This Article is From Aug 21, 2018

திமுக தலைவர் ஆகிறாரா ஸ்டாலின்? 28 ஆம் தேதி கூடும் பொதுக்குழு கூட்டம்

திமுக கட்சி தலைவர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

திமுக தலைவர் ஆகிறாரா ஸ்டாலின்? 28 ஆம் தேதி கூடும் பொதுக்குழு கூட்டம்
Chennai:

சென்னை: திமுக தலைவராக இருந்து மு.கருணாநிதி, உடல் நல பாதிப்புகளினால் கடந்த ஆகஸ்டு மாதம் 7 ஆம் தேதி இயற்கை எய்தினார். அதனை அடுத்து, திமுகவின் செயற்குழு கூட்டத்தில் மறைந்த தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிலையில், வரும் ஆகஸ்டு 28 ஆம் தேதி திமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைப்பெற உள்ளதாக அக்கட்சி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மு.க ஸ்டாலின் தலைமையில் நடக்க இருக்கும் பொதுக்குழு கூட்டம், அண்ணா அறிவாலயத்தில் காலை 9 மணிக்கு தொடங்கும் என்று திமுகவின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.

திமுக கட்சி தலைவர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

திமுக கட்சி நிர்வாகத்தில் அனுபவம் கொண்ட மு.க ஸ்டாலின், கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 1967 ஆம் ஆண்டு, தனது 14 வது வயதில் தேர்தல் பிராச்சராங்களில் பங்கேற்ற ஸ்டாலின், 1984 ஆம் ஆண்டு திமுகவின் இளைஞர் அணி செயலாளராக பதிவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது

இதற்கிடையில், “கலைஞரின் உண்மையான விசுவாசிகள் என் பக்கம் உள்ளனர்” என்று மு.க அழகிரி கூறியது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது
 

.