Read in English
This Article is From Sep 07, 2018

எரிபொருள் விலை உயர்வை கண்டித்து நடக்கும் பந்த்தில் திமுக பங்கேற்கும் - ஸ்டாலின்

இன்று பெட்ரோல், டீசல் விலை ஒரே நாளில் 50 பைசா விலை அதிகரிக்கப்பட்டு, புதிய வரலாற்று உச்சத்தில் உள்ளது

Advertisement
இந்தியா Posted by

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, செப்டம்பர் 10-ம் தேதி காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ள, தேசிய அளவிலான பந்த்தில் திமுக பங்கேற்க இருப்பதாக அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்று ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், மத்திய பா.ஜ.க அரசு, முன்னர் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போதும், பெட்ரோல்,டீசல் மீதான கலால் வரியை அதிகரித்து வந்தது.

விலை குறைவால் கிடைத்த பலன்களை மக்களுக்கு கொடுக்கும் நல்ல எண்ணம் மத்திய அரசிடம் இல்லை. இப்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவதைக் கட்டுப்படுத்தவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெட்ரோல், டீசல் விலையும் லிட்டருக்கு 100 ரூபாயை நோக்கி அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்றார்.

இன்று பெட்ரோல், டீசல் விலை ஒரே நாளில் 50 பைசா விலை அதிகரிக்கப்பட்டு, புதிய வரலாற்று உச்சத்தில் உள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை 83 ரூபாயையும், டீசல் விலை 76 ரூபாயையும் தாண்டியது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement
Advertisement