Read in English
This Article is From Sep 29, 2018

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் திமுக பங்கேற்காது - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

அரசியல் ஆதாயத்திற்காக எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடத்தப்படுவதாக குற்றம்சாட்டியுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விழாவில் திமுக பங்கேற்காது என்று அறிவித்துள்ளார்.

Advertisement
தெற்கு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

Chennai:

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நினைவாக அனைத்து மாவட்டங்களிலும் நூற்றாண்டு விழா நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான அழைப்பிதழில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் திமுக பங்கேற்காது என்று கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது -
எம்.ஜி.ஆரின் பெயரை அரசியல் ஆதாயம் பெறுவதற்காக அதிமுக பயன்படுத்தி வருகிறது. அரசு விழா என்ற பெயரில் கட்சியின் நிகழ்ச்சியாக நடத்தப்படும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்க வேண்டும் என்று திமுக ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை. இந்த விழாவில் திமுக பங்கேற்காது என்று முடிவு செய்துள்ளேன்.

இருப்பினும் விழா அழைப்பிதழில் உள்ள விருந்தினர்களின் பட்டியலில் எனது பெயரையும் இடம்பெறச் செய்தனர். அந்த அரசியல் நாகரிகத்தை நான் மதிக்கிறேன். பல்வேறு மாவட்டங்களில் நடந்து வரும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கருணாநிதியையும், அவரது குடும்பத்தினரையும் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் விமர்சித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

மறைந்த எம்.ஜி.ஆர்., அதிமுக கட்சியை நிறுவியர். தமிழகத்தின் முதல்வராக கடந்த 1977 முதல் 1987 வரை இருந்தார். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கடந்த ஓராண்டாக நடந்து வருகிறது. இதோடு ரூ. 5,140 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இதில் சுமார் 8.26 லட்சம் பேர் பயன் அடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement