This Article is From Feb 12, 2019

‘நான் மட்டுமல்ல தம்பிதுரையும் அப்படித்தான் சொல்கிறார்!’- கொதிக்கும் துரைமுருகன்

திமுக பொருளாளர் துரைமுருகன், ‘அரசு பணப் பட்டுவாடா செய்வதை நான் மட்டுமல்ல அதிமுக எம்.பி., தம்பிதுரையும் தானே விமர்சித்துள்ளார்’ என்று கொதித்துள்ளார். 

‘நான் மட்டுமல்ல தம்பிதுரையும் அப்படித்தான் சொல்கிறார்!’- கொதிக்கும் துரைமுருகன்

அதிமுக எம்.பி., தம்பிதுரையை சம்பந்தப்படுத்திப் பேசியுள்ளார் துரை முருகன்

ஹைலைட்ஸ்

  • வறுமை கோட்டிற்குக் கீழ் இருப்பவர்களுக்கு ரூ.2000, முதல்வர் அறிவிப்பு
  • இந்த அறிவிப்பை துரைமுருகன் விமர்சித்துள்ளார்
  • விமர்சிக்கும்போது, தம்பிதுரையை மேற்கோள் காட்டியுள்ளார் துரைமுருகன்

திமுக பொருளாளர் துரைமுருகன், ‘அரசு பணப் பட்டுவாடா செய்வதை நான் மட்டுமல்ல அதிமுக எம்.பி., தம்பிதுரையும் தானே விமர்சித்துள்ளார்' என்று கொதித்துள்ளார். 

நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மீனவத் தொழிலாளர்கள், விவசாய தொழிலாளர்கள், ஏழைத் தொழிலாளர்கள், பட்டாசுத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரூ. 2 ஆயிரம் சிறப்பு நிதி வழங்கப்படும். இதற்காக முதற்கட்டமாக ரூ. 1,200 கோடி ஒதுக்கப்படும். இந்த சிறப்பு நிதியால் 60 லட்சம் குடும்பங்கள் பலன் அடையும்' என்ற அறிவிப்பை வெளியிட்டார். 

தேர்தல் நெருங்கி வருவதால், இந்த அறிவிப்பை திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளும் எதிர்த்தன. இதையொட்டி செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், ‘நான் நேரடியாகவே முதல்வரை விமர்சித்தேன். இன்னும் ஒரு சில மாதங்களில் தேர்தல் வரவுள்ள நிலையில், இது சட்டத்துக்கு உட்பட்டு செய்யப்படும் பணப்பட்டுவாடா என்றேன். 

நான் மட்டுமா இப்படி சொல்கிறேன். சமீபத்தில் மத்திய அரசும் விவசாயிகளுக்கு இதைப் போன்ற ஒரு திட்டத்தை அறிவித்தது. அதை விமர்சித்த பேசிய அதிமுக-வின் தம்பிதுரையும் அதைத்தான் சொன்னார்' என்று கருத்து கூறியுள்ளார். 

2019-20 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய அரசு தாக்கல் செய்தது. அப்போது சிறிய விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கு மூலம் கொடுக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. அதை லோக்சபா துணை சபாநாயகரும் அதிமுக எம்.பி-யுமான தம்பிதுரை விமர்சித்துப் பேசினார். 


 

.