This Article is From Mar 07, 2020

“கொலை செஞ்சவரு எடப்பாடி..!”- முதல்வருக்கு எதிராக திமுகவின் ஜெ.அன்பழகன் பகீர் குற்றச்சாட்டு!!

"ஆனால், அவர் எப்படிப்பட்டவர் என்பதற்காக இதைச் சொல்கிறேன்."

“கொலை செஞ்சவரு எடப்பாடி..!”- முதல்வருக்கு எதிராக திமுகவின் ஜெ.அன்பழகன் பகீர் குற்றச்சாட்டு!!

"அவரைப் பார்த்தால் ஒரு முதல்வர் போலவே தெரியாது. சட்டைக் கையை மடித்துவிட்டு ஒரு ரவுடி போலவே வலம் வருகிறார்"

ஹைலைட்ஸ்

  • முதல்வர் எடப்பாடிக்கு எதிராக பொது மேடையில் பேசியுள்ளார் அன்பழகன்
  • எடப்பாடியைப் பார்த்தால் முதல்வரைப் போலவே தோன்றவில்லை: அன்பழகன்
  • தமிழக அமைச்சர்களே அடாவடியாக பேசி வருகிறார்கள்: அன்பழகன்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினினின் 67வது பிறந்தநாள் மார்ச் 1 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. அதையொட்டி திமுகவினர் பல்வேறு இடங்களில் சிறப்புக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். அப்படியொரு கூட்டத்தில் பேசிய திமுக மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜெ.அன்பழகன், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பேசி பரபரப்பைக் கிளப்பியுள்ளார். 

அன்பழகன் தனது பேச்சின்போது, “எதற்கெடுத்தால் தான் ஒரு விவசாயி என்று சொல்லிக் கொள்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. மண்வெட்டிப் பிடித்த கை எனது கை என்கிறார். ஆனால், அதே மண்வெட்டியை வைத்து அவர் பலரைக் கொன்றிருக்கிறார். அப்படி கொலை செய்ததற்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த வழக்கிலிருந்து தற்போது அவர் வெளிவந்திருக்கலாம். 

ஆனால், அவர் எப்படிப்பட்டவர் என்பதற்காக இதைச் சொல்கிறேன். அவரைப் பார்த்தால் ஒரு முதல்வர் போலவே தெரியாது. சட்டைக் கையை மடித்துவிட்டு ஒரு ரவுடி போலவே வலம் வருகிறார்,” என்றார்.

தொடர்ந்து அவர், “இதைப் போலத்தான் அமைச்சர் ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் ராஜேந்திர பாலாஜி. அவரை அருகில் சென்று பார்த்தால், அவருடைய முகமும் ‘ஹட்ச்' விளம்பரத்தில் வரும் நாயின் முகமும் ஒன்று போலவே இருக்கும். எதற்கெடுத்தாலும், யாரைப் பற்றிப் பேசினாலும் வெட்டுவேன், குத்துவேன் என்பவர் அவர். ஒரு நாட்டில் அமைச்சரே இப்படி இருந்தால், அந்த அரசாங்கம் எப்படி இருக்கும்?” எனக் கேள்வி எழிப்புயுள்ளார். 
 

.