This Article is From Apr 17, 2019

பாஜகவினரால் என் வெற்றியை தடுத்து நிறுத்த முடியாது - கனிமொழி

Lok Sabha Election 2019: அவர்கள் எங்களை மிரட்டுவதற்கு விரும்புகிறார்கள்… தூத்துக்குடி தேர்தலில் ஆளும் கட்சி தடுமாறி வருகிறது. திமுக தொண்டர்கள் முன்பை விட இப்போது உற்சாகமாக செயல்படுவார்கள்ர்” என்று கூறியுள்ளார்.

பாஜகவினரால் என் வெற்றியை தடுத்து நிறுத்த முடியாது - கனிமொழி

Election 2019: வரித்துறை அதிகாரிகள் தமிழகத்தில் 18 இடங்களில் தேடல்களை நடத்தினர்

ஹைலைட்ஸ்

  • சோதனை திட்டமிட்டு நடத்தப்படுகிறது - கனிமொழி
  • தவறான தகவல் கிடைத்து விட்டது - வருமான வரித்துறை
  • நாளை தேர்தல் நடைபெறவுள்ளது
Thoothukudi, Tamil Nadu:

திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கனிமொழி, “வருமான வரித்துறையினரால் அழுத்தத்தை கொடுத்தாலும்,  நாடாளுமன்றத் தேர்தலில் நான் வெற்றிபெறுவதை பாஜக வினரால் தடுக்க முடியாது.” என்று தெரிவித்துள்ளார். 

இந்த வருமானவரி சோதனை மூலம் பிஜேபி என் வெற்றியைத் தடுக்க முடியாது. இந்த சோதனை ஜனநாயக விரோதம், வேண்டுமென்றே திட்டமிட்டு சோதனை நடப்பட்டு வருகிறது. சோதனையில் எந்தவொரு ஆவணமும் கைப்பற்றப்படவில்லை” என்று கனிமொழி ஏஎன்ஐ  செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். 

வருமான வரி சோதனை குறித்து வந்த தகவலின் படி “தவறான குறிப்பு” என்று கூறுயுள்ளனர். எந்தவொரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்று கூறியுள்ளனர். 

“அவர்கள் எங்களை மிரட்டுவதற்கு விரும்புகிறார்கள்… தூத்துக்குடி தேர்தலில் ஆளும் கட்சி தடுமாறி வருகிறது. திமுக தொண்டர்கள் முன்பை விட இப்போது உற்சாகமாக செயல்படுவார்கள்ர்” என்று கூறியுள்ளார். 

நேற்று மாலை திமுக தலைவர்களில் ஒருவரான கனிமொழி வீட்டில் கட்டுக் கட்டாக பணம் உள்ளது என்று உள்ளூர்க்காரர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் வருமான வரிச்சோதனை நடத்தப்பட்டது. கனிமொழி தங்கியிருந்த வீட்டில் மத்திய குழுவினர் சோதனை நடத்த முற்பட்டபோது கனிமொழி முழுமையாக ஒத்துழைத்தார். கதவுகள் மூடப்பட்டு சோதனைகள் நடந்தன. ஆனால், எந்தவொரு ஆவணங்களும் சோதனையில் கைப்பற்றபடவில்லை.

திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின் மோடி ஆட்சியை இழந்து விடுவோம் என்ற பயத்தில் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக அனைத்து மத்திய புலனாய்வு நிறுவனங்களையும் தனக்கு சாதமாக பயன்படுத்துகிறார் என்று தெரிவித்துள்ளார். 

பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்திரராஜன் இடத்தில் கோடி கோடியாக பணம் உள்ளது ஆனால் அங்கு சோதனை எதுவும் நடத்தவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தலின் பொருட்டு ரூ. 2000 வாக்காளர்களுக்கு வழங்கிய அமைச்சர் வேலுமணி வீட்டில் சோதனை செய்யவில்லையே ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஸ்டாலின். 

கடந்த வாரம், வரித்துறை அதிகாரிகள் 18 இடங்களில் தேடல்களை நடத்தினர். சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. 

.