This Article is From Nov 27, 2019

“பதில் சொல்லுங்க அமைச்சரே…”- Kudankulam விவகாரம்; நாடாளுமன்றத்தை அதிரவிட்ட T.R.Baalu!

"இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம், வழக்குகளைத் திரும்பப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது"

“பதில் சொல்லுங்க அமைச்சரே…”- Kudankulam விவகாரம்; நாடாளுமன்றத்தை அதிரவிட்ட T.R.Baalu!

"மத்திய அரசோ, இந்த அரசின் கைப்பாவையாக இருக்கும் மாநில அதிமுக அரசோ, அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை"

கூடங்குளத்தில் (Kudankulam) இருக்கும் அணு உலை ஆலைக்கு எதிராக போராட்டம் செய்த பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு எதிராக பல்வேறு குற்றப் பிரிவுகளுக்குக் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதை திரும்பப் பெறக் கோரி, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு (T.R.Baalu) வலியுறுத்தினார். நாடாளுமன்றக் கூட்டத் தொடரின்போது, மக்களவையில் அவர் இப்படிப் பேசியுள்ளார். அவர் பேசும்போது மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் அவையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

“கூடங்குளம் அணு உலை அமைப்பதற்கு எதிராக அற வழியில் போராட்டம் செய்த மக்களுக்கு எதிராக இந்திய அரசாங்கம் பல்வேறு குற்றப் பிரிவுகளுக்குக் கீழ் வழக்குகள் பதிவு செய்துள்ளன. இது ஒரு நபர், இரு நபர் என்றல்ல, ஆயிரக்கணக்கான மீனவ, எளிய மக்கள் மீது இப்படி வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. 

kudankulam

இந்த உலகத்தின் பல இடங்களில் அணு உலை விபத்துகள் நடந்துள்ளன. அப்படி இருக்கையில், மக்களுக்கு அது குறித்து இருக்கும் அச்சம் சாதாரணமானதுதான். அதற்கு எதிராக மக்கள் போராடினால், இப்படி வழக்குத் தொடுப்பதா?

இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம், வழக்குகளைத் திரும்பப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது. ஆனால், மத்திய அரசோ, இந்த அரசின் கைப்பாவையாக இருக்கும் மாநில அதிமுக அரசோ, அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை,” என்றார் கொதிப்புடன்,

அப்போது எதிரில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அமர்ந்திருந்ததைப் பார்த்த பாலு, “மூத்த அமைச்சர் ராஜ்நாத் சிங் இங்கே தான் இருக்கிறார். அது குறித்து அவர் பதில் சொல்லியாக வேண்டும். பதில் சொல்லுங்கள் அமைச்சர். பதில் சொல்லுங்ள்,” என்று அதிரவைத்தார். 

.