ஹைலைட்ஸ்
- உடல் எடை குறைப்பிற்கு கீடோ டயட்டை பின்பற்றலாம்.
- வேகவைத்த முட்டையில் புரதம் நிறைந்திருக்கிறது.
- அவகாடோவில் ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் ஆரோக்கிய கொழுப்புகள் அதிகம்.
உடல் எடை குறைப்பு தற்போது பெரும்பாலானோர் பின்பற்றும் வழிமுறை கீடோ டயட். கார்போஹைட்ரேட் மிக குறைவாகவும், கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை அதிகமாகவும் சாப்பிடுவதுதான் கீடோ டயட். பொதுவாக உடலுக்கு தேவையான ஆற்றலை தரக்கூடியது கார்போஹைட்ரேட். இதை தவிர்த்துவிட்டால், உடல் ஏற்கனவே சேர்த்து வைத்துள்ள கொழுப்புகளை எரித்து ஆற்றலாக மாற்றி கொள்ளும். கொழுப்புகள் எரிக்கப்படும்போது உடல் எடையும் குறைய ஆரம்பிக்கும். கீடோ டயட்டை நீங்கள் பின்பற்றினால் தவறாமல், முட்டை, கோழி, மீன், கொழுப்பு நீக்கப்படாத பால், தேங்காய் எண்ணெய், சீஸ், ஆலிவ் ஆயில் மற்றும் அவகாடோ போன்றவற்றை உணவில் நீங்கள் நிச்சயம் சேர்த்து கொள்ள வேண்டும். அதேபோல, மேலும் சில ஆரோக்கிய உணவுகளை பார்ப்போம்.
கோழி மற்றும் அவகாடோ:
கோழியில் உடலுக்கு தேவையான புரதம் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்திருக்கின்றது. அவகாடோவில் கொழுப்பு சத்து அதிகம் என்பதால் கீடோ டயட்டில் இருப்பவர்கள் கட்டாயமாக சாப்பிட வேண்டிய ஒன்று. நீங்கள் அவகாடோ மற்றும் க்ரில்டு ஃபிஷ் சாப்பிடலாம்.
காய்கறிகளும் தேங்காய் எண்ணெயும்:
ப்ரோகோலி, மஷ்ரூம், முட்டைகோஸ், செலரி, கேல் மற்றும் குடைமிளகாயில் மிக குறைந்த அளவு கார்போஹைட்ரேட், கொழுப்பு மற்றும் புரதம் இருக்கிறது. இந்த காய்கறிகளை தேங்காய் எண்ணெயில் வதக்கி சாலட் போன்று சாப்பிடலாம். நீங்கள் விரும்பினால் நெய் அல்லது ஆலிவ் எண்ணெயில் கூட செய்து சாப்பிடலாம். மேலும் இதில் சீஸ் சேர்த்து கொள்ளுங்கள்.
மீன் மற்றும் சோர் க்ரீம்:
மீனில் புரதம் மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் உள்ளதால் மூளை செயல்பாடுகளுக்கு மிகவும் நல்லது. கொழுப்பு சத்து நிறைந்திருக்கும் மீனுடன் சோர் க்ரீம் சேர்த்து சாப்பிடுவது கீடோ டயட்டிற்கு உகந்த உணவு.
முட்டை மற்றும் சீஸ்:
முட்டையில் புரதம் அதிகம். வேகவைத்த முட்டையுடன் சீஸ் சேர்த்து சாப்பிட உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைத்துவிடுகின்றன.
தேங்காய் பால் மற்றும் அவகாடோ ஸ்மூத்தி:
கீடோ டயட்டில் இருக்கும்போதே, சில சமயங்களில் உங்களுக்கு சலிப்பு தட்டி விடக்கூடும். அவ்வப்போது நீங்கள், தேங்காய் பால் மற்றும் அவகாடோ சேர்த்து ஸ்மூத்தி செய்து குடிக்கலாம். இதில் உடலுக்கு தேவையான ஆரோக்கிய கொழுப்புகள் அடங்கியிருக்கிறது.
க்ரீக் யோகர்ட் மற்றும் நட் ஸ்மூத்தி:
பாதாம், வால்நட் மற்றும் முந்திரி ஆகியவற்றில் கொழுப்பு சத்து அதிகம். இவற்றை கொண்டு செய்யப்படும் ஸ்மூத்தியில் புரதம் இருக்க வேண்டும் என நினைத்தால் அதில் க்ரீக் யோகர்ட் சேர்த்து கொள்ளுங்கள். இது உங்கள் குடல் பகுதிக்கு ஆரோக்கியத்தை கொடுப்பதோடு, உங்களை நாள் முழுக்க ஃப்ரஷாக வைத்திருக்கும்.