This Article is From Apr 18, 2020

தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட அபராதம் எவ்வளவு தெரியுமா?

மேலும், ஊரடங்கை மீறியதாக 1,94,339 வாகனங்கள்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனைபோல், 2,14,941 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.1,06,74,294 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட அபராதம் எவ்வளவு தெரியுமா?

தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட அபராதம் எவ்வளவு தெரியுமா?

ஹைலைட்ஸ்

  • ஊரடங்கை மீறியவர்களிடமிருந்து ரூ.1 கோடி அபராதம் வசூல்
  • ஊரடங்கை மீறியதாக இதுவரை 2,28,823 பேர் கைது
  • ஊரடங்கை மீறியதாக 1,94,339 வாகனங்கள் பறிமுதல்

ஊரடங்கை மீறியவர்களிடமிருந்து ரூ.1 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையானது 14,378 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 991 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, 43 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக இதுவரை 480 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.  

இதேபோல், தமிழகத்தில் மொத்தம் 1,323 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்தியளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கபட்ட மாநிலத்தில் தமிழகம் 3வது இடத்தில் உள்ளது. 

கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் கடந்த மாதம் 25-ம்தேதி முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. எனினும், இந்த இடைப்பட்ட நாட்களில் வைரஸ் கட்டுக்குள் வரவில்லை. இதையடுத்து மே.3ம்தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து பிரதமர் மோடி உத்தரவிட்டார். 

இதற்கிடையே, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், பொதுமக்கள் வெளியை வராத வண்ணம் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவசியமின்றி வெளியை சுற்றித்திரியும் பொதுமக்களுக்கு மீது நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 2,28,823 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், ஊரடங்கை மீறியதாக 1,94,339 வாகனங்கள்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனைபோல், 2,14,941 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.1,06,74,294 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. 

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நிபந்தனையுடன் உரியவர்களிடம் ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை, 29,455 வாகனங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

.