This Article is From Oct 13, 2018

இந்தியாவில் அனைவரும் சைவமாக இருக்க வேண்டுமா? உச்சநீதிமன்றம் கேள்வி

அனைவரும் சைவமாக தான் இருக்க வேண்டும் என உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது

இந்தியாவில் அனைவரும் சைவமாக இருக்க வேண்டுமா? உச்சநீதிமன்றம் கேள்வி

இறைச்சிகளை ஏற்றுமதி செய்வதை ஊக்கப்படுத்தக்கூடாது என்பது தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது

New Delhi:

இந்தியாவில் இருந்து இறைச்சிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு எதிராக தன்னார்வ அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது, அதில் நீதிபதிகள், நாட்டில் உள்ள அனைவரும் சைவமாக தான் இருக்க வேண்டுமா என சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

இறைச்சிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை ஆதரிக்க கூடாது என்பது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் மதன் பி.லோகுர் மற்றும் திபக் குப்தா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள்

அனைவரும் சைவமாக தான் இருக்க வேண்டும் என உத்தரவிட முடியாது என வழக்கு தொடர்ந்த அமைப்பினரிடம் தெரிவித்தனர். மேலும், அந்த அமைப்பினர் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.

இதுதொடர்பாக பதிலளித்த நீதிபதிகள், இதனை அரசே முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்தனர். அதற்கு மனுதாரர்கள், நாங்கள் ஏற்கனவே பலமுறை அரசிடம் முறையிட்டுள்ளோம் எந்த நடவடிக்கையும் இல்லை என்றனர்.

இதற்கு நீதிபதிகள், இது எங்களது பணி அல்ல. அரசுக்கு நாங்கள் எடுத்துச்சொல்ல என கூறி வழக்கை அடுத்த பிப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

.