বাংলায় পড়ুন Read in English
This Article is From Jun 14, 2019

மேற்குவங்க மருத்துவர்களுக்கு ஆதரவாக போராட்டம்! - டெல்லி, மும்பையிலும் மருத்துவ சேவை பாதிப்பு!

Doctor strike: மேற்குவங்கத்தை சேர்ந்த மருத்துவர்கள் கடந்த செவ்வாயன்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Advertisement
இந்தியா Edited by (with inputs from Agencies)
New Delhi:

மேற்குவங்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு ஆதரவாக பல்வேறு மாநிலங்களிலும், மருத்துவர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டதில் ஈடுபட்டுள்ளனர். இதில், டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், ஜெயப்பூர், திருவனந்தபுரம் உள்ளிட்ட ஏராளமான மாநிலங்களை சேர்ந்த மருத்துவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், மருத்துவர்கள் தலையில் ஹெல்மட் அணிந்தபடியும், கட்டுகள் போட்டப்படியும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். முன்னதாக, நேற்று கொல்கத்தாவில் மாநில அரசால் நடத்தப்படும் எஸ்எஸ்கேஎம் மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுப்பட்ட ஜூனியர் மருத்துவர்களை நேரில் சந்தித்த மம்தா பானர்ஜி, பணிக்கு திரும்புமாறு வலியுறுத்தினார். எனினும், மருத்துவர்கள் தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும், 'தங்களுக்கு நியாம் வேண்டும்' என குரல் எழுப்பி, போராட்டத்தை கைவிட மறுத்தனர்.

இதைத்தொடர்ந்து, நோயாளிகள் தவிர்த்து, மற்றவர்கள் யாரும் மருத்துவமனை வளாகத்தில் இருக்க அனுமதிக்க கூடாது என போலீசாருக்கு மம்தா வலியுறுத்தினார். மேலும், இது குறித்து மம்தா பானர்ஜி கூறும்போது, பணிக்கு திரும்பாத மருத்துவர்கள் விடுதியில் இருந்து வெளியேறுமாறு கூறியுள்ளார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Advertisement

மேற்குவங்கத்தில், அரசு மருத்துவமனை ஜூனியர் மருத்தவர்கள் நடத்தும் போராட்டத்தில் சீனியர் மருத்துவர்களும் கலந்து கொண்டுள்ளதால், அம்மாநிலத்தில் உள்ள மொத்த அரசு மருத்துவமனை சேவைகளும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில், உயிரிழந்த நோயாளியின் உறவினர்கள் பயிற்சி மருத்துவர் ஒருவர் மீது சரமாரி தாக்குதலை நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து மேற்குவங்க ஜூனியர் மருத்துவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

அரசு மருத்துவமனைகளில், காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வெளி நோயாளிகள் சிகிச்சை பிரிவு மூடப்பட்டிருக்கும், அவசர சிகிச்சை பிரிவுகள் வழக்கம் போல், திறந்திருக்கும், எனினும், மருத்துவர்களின் வருகை குறைவால், அந்த சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

அரசு மருத்துவர்களுக்கு ஆதரவாக பல தனியார் மருத்துவமனை மருத்துவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், தனியார் மருத்துவமனை சேவைகளும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement

கடந்த திங்கள் அன்று இரவு கொல்கத்தாவில் உள்ள என்ஆர்எஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் மீது தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இதில் அந்த மருத்துவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதைத்தொடர்ந்து, மருத்துவர்களுக்கு அதிக பாதுகாப்பு வழங்கவும், தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மாநிலம் முழுவதும் மருத்துவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

மருத்தவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக மாநில அரசு உத்தரவாதம் அளித்தபோதிலும், மருத்துவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட மறுத்துள்ளனர்.

Advertisement