அவரது வீட்டிலிருந்து 35 கி.மீ தொலைவில் உள்ள பெண்கள் பள்ளியில் சுனைனா சேர்க்கப்பட்டுள்ளார்.
மருத்துவராகி தனது கிராமத்திற்கு உதவுவேன் என்பதில் உறுதியாக இருக்கும் உத்தரபிரதேசத்தை சேர்ந்த சிறுமி சுனைனா ராவத்துக்கு உதவியதற்கு நன்றிகள்.
சிறுமி சுனைனாவின் கல்விக்காக நூற்றுக்கணக்கானவர்கள் தாராளமாக நன்கொடை அளித்ததன் மூலம் ரூ.31,54,879 கிடைத்துள்ளது. இது அவரது 11 வயது சகோதரர் ஆஷிஷுக்கும் உதவியது, இப்போது சுனைனாவுடன் அவரது சகோதரரும் புதிய பள்ளியில் பயின்று வருகிறார்.
உங்களின் ஆதரவுகளுக்கு சுனைனாவின் குடும்பத்தினர், அந்த கிராம மக்கள் மற்றும் பலர் நன்றி தெரிவித்துள்ளனர்.
சுனைனாவுக்கான என்டிடிவியின் பிரச்சாரம் மே மாதத்தில் தொடங்கப்பட்டது, ஜூலை மாதம், அவர் தனது வீட்டிலிருந்து 35 கி.மீ தூரத்தில் லக்னோவில் உள்ள (ஸ்டடி ஹால் கல்வி அறக்கட்டளையால் நடத்தப்படும்), பிரேர்னா பெண்கள் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.
தற்போது 6ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமி சுனைனா அனைத்து பாடங்களையும் ரசித்து கற்று வருகிறார். அவருடன் அவரது சகோதரரும் அதே பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளார். காலை 10 மணிக்கு சுனைனாவும் அவருடைய சகோதரரையும் வீட்டிலிருந்து அழைத்துச் செல்ல சிறப்பு வேன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அவர்கள் காலை 11:30 மணிக்கு பள்ளியை சென்றடைவார்கள், மதியம் 12 மணி முதல் மதியம் 1:30 மணி வரை ஆங்கிலம் மற்றும் கணிதத்திற்கான பயிற்சி வகுப்பில் கலந்து கொள்கிறார்கள். பின்னர் அவர்கள் மதியம் 1:30 மணி முதல் மாலை 6 மணி வரை வழக்கமான வகுப்புகளில் கலந்து கொள்கிறார்கள். இதன் பின்னர் அவர்கள் வேனிலே வீட்டிற்குத் திரும்புகின்றனர்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு சிறுமி சுனைனாவை என்டிடிவி குழுவினர் சந்தித்தபோது அவர் கூறியதாவது, நான் பள்ளிக்கு வருவதை விரும்புகிறேன். நான் பாடங்களை கற்க ஆசிரியர்கள் எனக்கு உதவுகிறார்கள். நான் கடினமாக உழைப்பதன் மூலமாக மருத்துவராக வேண்டும் என்ற எனது கனவை நிச்சயம் அடைவேன் என்று அவர் உறுதியாக கூறினார்.
அந்த பள்ளியின் முதல்வர் கூறும்போது, மாணவி சுனைனா எளிதில் எதையும் புரிந்துக்கொள்ளக் கூடியவர். அவருக்கு அடிப்படை திறானான, ஆங்கிலம், இந்தி மற்றும் கணிதம் உள்ளிட்டவற்றை தற்போது கற்று கொடுத்து வருகிறோம். தற்போது அவரது வகுப்பு தோழர்களுடன் 6 வகுப்பு படித்து வரும் சுனைனா, இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது என்று அவர் கூறினார்.
சகோதரர் ஆஷிஷூடன் சுனைனா.
உங்கள் பணம் சுனைனா மற்றும் ஆஷிஷின் பள்ளி கட்டணம், கல்வி, போக்குவரத்து, பள்ளி சீருடை, புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்கள் உள்ளிட்டவைகளை பெற பயன்படுத்தப்பட்டு வருகிறது.
எங்களின் இந்த பிரச்சாரத்தில், 'சேவ் த சில்ரன்' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனமும் இணைந்து செயல்பட்டது. இந்த தொண்டு நிறுவனமே சுனைவின் பள்ளி ஒருங்கிணைப்புகளை கையாண்டு வருகிறது. 1919 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட, 'சேவ் த சில்ரன்' ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களின் உண்மையான திறனை அடைய முடியும் என்பதை உறுதிப்படுத்த 100 ஆண்டுகால உழைப்பை தந்து வருகிறது.
இந்தியாவில் இந்த அமைப்பு 19 மாநிலங்களில் செயல்பட்டு வருகின்றன. இது ஒவ்வொரு குழந்தையும் உயிர்வாழ்வதையும், கற்றுக்கொள்வதையும், வன்முறை மற்றும் தீங்குகளிலிருந்து பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்யும் மிகப்பெரிய குழந்தை உரிமை அமைப்புகளில் ஒன்றாகும்.
'மருத்துவர் சுனைனா' கல்வி கற்க உங்களின் முயற்சிக்கு மீண்டும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். தொடர்ந்து, இது குறித்து பதிவிடுவோம்.
Disclaimer: New Delhi Television Limited is helping spread awareness of this child's need for an education. The donations are received by a Trust called the “Gargi & Vidya Prakash Dutt Foundation” and shall be utilized according to a plan prepared and monitored by the NGO “Save the Children” (Knowledge Partner) with external audits. The funds are paid directly to the “Study Hall Education Foundation” where the child is now being educated. NDTV cannot monitor the use of funds/donations nor shall be liable for any claim(s) made by any person or entity, including any statutory or governmental authority arising out of the misappropriation of funds.