தைவானை சேர்ந்த பெண்ணின் கண்ணில் நான்கு தேனீக்கள் வாழ்ந்து வந்துள்ளன
தேன் கூண்டுகளில் தான் தேனீக்கள் வாழ்ந்து நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் மனிதனின் கண்ணில் தேனீ வாழ்ந்து கேள்விபட்டிருக்கோமா.
தைவானில் ஒரு பெண்ணின் கண்ணில் தான் நான்கு தேனீக்கள் வாழ்ந்து வந்துள்ளன. இது மேஜிக்கோ சர்க்கஸ் நிகழ்வோ இல்லை. மருத்துவர்களையே அதிர வைத்த நிகழ்வு.
தைவானை சேர்ந்த ஹீ என்னும் பெண்மனி, கண் வீங்கியதால் பூயின் மருத்துவமைக்கு சென்றார். அந்த பெண்ணின் கண்ணில் நான்கு தேனீக்கள் இருந்ததை கண்டுபிடித்தனர் மருத்துவர்கள். மேலும் அந்த தேனீக்கள் அந்த பெண்ணின் கண்ணீரை உரிந்து வாழ்ந்து வந்ததாக கூறினர்.
இவ்வாறு உலகில் மனிதனின் கண்ணில் தேனீக்கள் வாழ்ந்த்தாக கூறப்படும் நிகழ்வு இதுவே முதல் முறையாகும்.
‘கல்லறையை சுத்தம் செய்யும் போது கண்ணில் ஏதோ விழுந்தது போல் இருந்தது. தூசி தான் என நினைத்து துடைத்து விட்டேன். மருத்துவமனைக்கு வந்த பின்பு தான் அது தூசி இல்லை தேனீ என தெரிய வந்தது' என ஹீ தெரிவித்தார்.
தேனீக்களை எடுத்த பின்பு 80 சதவிகிதம் பார்வையை ஹீ பெற்றுள்ளார். ஹீயின் கண்ணில் இருந்தது ஹாலிஸ்திடே என்னும் வகையான தேனீக்கள் ஆகும்.
Click for more
trending news