This Article is From Jul 07, 2019

உத்தர பிரதேசத்தில் டார்ச் லைட் வெளிச்சத்தில் நோயாளிக்கு மருத்துவம்

மருத்துவர்கள் தொடர் மின்வெட்டினால் நோயாளியின் உறவினர்களை டார்ச் லைட்டினை பிடிக்கச் செய்து மருத்துவம் பார்த்துள்ளனர்.

உத்தர பிரதேசத்தில் டார்ச் லைட் வெளிச்சத்தில் நோயாளிக்கு மருத்துவம்

நிர்வாகத்தின் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் - துணை பிரிவு மாஜிஸ்திரேட் திபெந்திர குமார்(Representational Image)

Sambhal, Uttar Pradesh:

உத்தர பிரதேசம் சம்பல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் தொடர் மின்வெட்டு காரணமாக அடிப்படை வசதிகள் கூட இல்லாத காரணத்தினால் டார்ச் லைட் வெளிச்சத்தில் சிகிச்சை செய்துள்ளனர். 

மருத்துவர்கள் தொடர் மின்வெட்டினால் நோயாளியின் உறவினர்களை டார்ச் லைட்டினை பிடிக்கச் செய்து மருத்துவம் பார்த்துள்ளனர். 

மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லையென்றும் இன்வெர்ட்டர் வசதி இல்லையென்பதால் பல மணிநேரங்கள் மின்சாரமின்றி தவித்து வருவதாகவும், அரசு இதற்கு தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென நோயாளி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். 

மருத்துவமனையின் துணை மருத்துவ ஆய்வாளர் டாக்டர். குப்தா, “ நிலைமை கட்டுக்குள் உள்ளது. கனமழை காரணமாகவே பவர் கட் ஏற்பட்டது” என்று கூறுகிறார். கனமழை நேரத்தில் மின்சார இல்லாதபோது மருத்துவர்கள் ஏன் டார்ச் லைட் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும். நாங்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் மாற்றுக்கு அனைத்து விதமான வசதிகளும் இங்கு செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனை குறித்து எடுத்த புகைப்படங்கள் அனைத்தும் போலியானவை என்று கூறியுள்ளார். 

துணை பிரிவு மாஜிஸ்திரேட்  திபெந்திர குமார் இதற்கு மருத்துவமனை நிர்வாகத்தின் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். 
 

.