கண் அறுவை சிகிச்சை நிபுணர் லெஸ்லி என்ற மூன்று வயது பெண் கொரில்லா குரங்கிற்கு கண்புரை அறுவை சிகிச்சையினை செய்தார்.
கலிஃபோர்னியாவில் உள்ள கண் மருத்துவர்கள் குழு தங்களின் திறமையை கொரில்லா குரங்கு மீது சோதித்துள்ளனர்.
சாண்டியாகோ மிருகக்காட்சி சாலையில் இருந்து கால்நடை மருத்துவர்களுடன் பணிபுரிந்த கண் அறுவை சிகிச்சை நிபுணர் லெஸ்லி என்ற மூன்று வயது பெண் கொரில்லா குரங்கின் கண்ணிலிருந்து கண்புரை ஒன்றினை டிசம்பர்10 அன்று அகற்றினர். மிருகக்காட்சி சாலையின் அதிகாரிகள் அறிவித்தனர்.
மிருகக்காட்சி சாலையின் மருத்துவ மையத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்றும் லெஸ்லி நன்றாக குணமடைந்து வருவதாகவும் கூறினர்.
இந்த அறுவை சிகிச்சை நிபுணர் கிறிஸ்ஹெய்செல் மனிதர்களின் கண்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். ஆனால் முதல்முறையாக கொரில்லாவிற்கு செய்துள்ளார்.
“நல்வாய்ப்பாக மனித மற்றும் கொரில்லா கண்களின் உடற்கூறியல் இடையிலான ஒற்றுமைகள் சிக்கலின்றி உள்ளது. இதனால் அறுவை சிகிச்சை எளிதாகவே இருந்தது” என்று மருத்துவர் மிருகக்காட்சி சாலையில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
“கண்ணின் எஞ்சிய பகுதி சிறந்த ஆரோக்கியத்துடன் இருப்பதாக தோன்றியது. இந்த அறுவை சிகிச்சை வாழ்நாள் முழுவதுக்கும் தெளிவான பார்வை திறனை கிடைக்கச் செய்கிறது”
மிருகக்காட்சி சாலை அதிகாரிகள், லெஸ்லியின் கண்புரை ஒரு காயம் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர். பிற கொரில்லாக்களுடன் விளையாடும்போது காயம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.
Click for more
trending news