This Article is From Dec 05, 2019

வெங்காயத்திற்கு பதில் அவகோடா சாப்பிடுகிறாரா? நிர்மலாவுக்கு ப.சிதம்பரம் சரமாரி கேள்வி

அப்போது, குறுக்கிட்டு பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி, சுப்ரியா சுலே, உள்நாட்டு உற்பத்தி எதற்காக குறைவானது என்று கேள்வி எழுப்பினார். மேலும், நீங்கள் எகிப்திய வெங்காயங்களை தான் சாப்பிடுகிறீர்களா என்று கேள்வி எழுப்பினார்.

வெங்காயத்திற்கு பதில் அவகோடா சாப்பிடுகிறாரா? நிர்மலாவுக்கு ப.சிதம்பரம் சரமாரி கேள்வி

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் நிர்மலா சீதாராமனை கடுமையாக விமர்சித்தார்.

New Delhi:

நாடாளுமன்றத்தில் நான் வெங்காயம் சாப்பிடுவதில்லை என்ற நிர்மலா சீதாராமனின் கருத்தை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. அப்படியென்றால் அவர் என்ன அவகோடா சாப்பிடுகிறாரா என காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சித்துள்ளனர். 

மக்களவையில் நேற்றைய தினம் வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கை குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து வந்தார். அப்போது, எகிப்த் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வெங்காயங்களை இறக்குமதி செய்தற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். 

அப்போது, குறுக்கிட்டு பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி, சுப்ரியா சுலே, உள்நாட்டு உற்பத்தி எதற்காக குறைவானது என்று கேள்வி எழுப்பினார். மேலும், நீங்கள் எகிப்திய வெங்காயங்களை தான் சாப்பிடுகிறீர்களா என்று கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், தான் பூண்டு மற்றும் வெங்காயங்களை அதிகளவு சாப்பிடுவதில்லை என்றும், அதிகளவு வெங்காயம் பயன்படுத்தாத குடும்ப பின்னணியில் இருந்து தான் வந்துள்ளதாகவும் கூறினார். 

நிர்மலா சீதாராமனின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவை குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது என நிர்மலா சீதாராமனின் அலுவலகம் ட்வீட்டரில் தெரிவித்துள்ளது. 
 


மேலும், அந்த பதவில் நாடாளுமன்ற அவையில், வெங்காய விலையை கட்டுபாட்டுக்குள் வைப்பதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து நிர்மலா சீதாராமன் பேசும் முழு வீடியோவும் இதில் உள்ளதாகவும், அதில் தான் பேசியதின் ஒரு பகுதி மட்டும் தவறாக மேற்கோள் காட்டப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

lnk6766g

வெங்காய விலை உயர்வை கண்டித்து ப.சிதம்பரம் கட்சியினருடன் போராட்டம் நடத்தினர். 

இந்நிலையில், 3 மாதத்திற்கும் மேலாக திகார் சிறையில் இருந்த முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்  நேற்றைய தினம் வெளியே வந்த நிலையில் இன்று நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தார். அப்போது அவர், நிர்மலா சீதாராமனின் கருத்தை குறிப்பிட்டு அரசின் மனநிலையை அந்த கருத்து பிரதிபலிப்பதாக கடுமையாக விமர்சித்தார். 

நேற்றைய தினம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெங்காயம் சாப்பிடுவதில்லை என்று கூறியுள்ளார். அப்படியென்றால் அவர் எதை சாப்பிடுகிறார்? ஒருவேளை அவகோடா சாப்பிடுகிறாரா? என ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்தார். 


தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் வெங்காயத்தின் விலை ரூ.120 முதல் 180 வரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்குவங்கத்தில் ரூ.150 வரை எட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

.