This Article is From Jan 05, 2019

‘தீட்டு ஆகாதுங்க... என்னிடம் கர்ப்பப் பை இல்லை..!’- சபரிமலையேறிய பெண்ணின் குமுறல்

இதை வைத்து சங் பரிவார் அமைப்புகள் தொடர்ந்து வன்முறை செய்து வருகின்றனர்

Advertisement
Kerala Posted by

வியாழக்கிழமை இரவு சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வந்த இலங்கையைச் சேர்ந்த சசிகலா என்னும் 46 வயது மதிக்கத்தக்கப் பெண், சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. உச்ச நீதிமன்றத் தீர்ப்பையடுத்து, ஐயப்பனை தரிசனம் செய்யும் மூன்றாவது பெண் சசிகலாதான் என்று தெரிவிக்கப்பட்டது.

அதே நேரத்தில் ஐயப்பன் கோயிலுக்கு அருகில் ஊடகங்களுக்கு பேட்டியளித்த சசிகலா, “நான் 48 நாட்கள் விரதமிருந்து பின்னர்தான் சபரிமலைக்கு வந்தேன். 18 படிகளைக் கூட என்னை இங்கிருப்பவர்கள் ஏற விடவில்லை. நான் ஒரு உண்மை ஐயப்ப பக்தர்

என்ன தரிசனம் செய்யாமல் தடுக்க இவர்கள் யார். கோயிலுக்குள் சென்று தரிசனம் செய்ய எனக்கு அனைத்து உரிமைகளும் உண்டு. எனது கர்பப்பப் பையைக் கூட நான் நீக்கிவிட்டேன். அதற்கான மருத்துவ சான்றிதழ்களையும் வைத்துள்ளேன்” என்று குமுறினார்.

Advertisement

சசிகலா சொன்னது ஒரு புறமிருந்தாலும், அவர் ஐயப்பன் கோயிலுக்கு உள்ளே சென்று தரிசனம் செய்து வந்துவிட்டதாகவும், அதை வெளியே சொல்ல அவர் அஞ்சுகிறார் என்றும் கூறப்பட்டு வருகிறது.

சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலில் கடந்த புதன் கிழமை அதிகாலையில் சிந்து மற்றும் கனகதுர்கா என்ற 2 இள வயதுப் பெண்கள், சாமி தரிசனம் செய்தனர். ‘அனைத்து வயதுப் பெண்களும் ஐயப்பன் கோயிலுக்குள் செல்லலாம்' என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பரில் தீர்ப்பளித்த பின்னர், முதன்முறையாக கோயிலுக்குள் சென்றது இந்த இரண்டு பெண்கள்தான். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வலதுசாரி அமைப்புகள், மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல இடங்களில் போராட்டக்காரர்கள், வன்முறையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

இரண்டு பெண்கள் சபரிமலை கோயிலுக்குள் சென்றது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன், ‘நேற்று ஐயப்பன் கோயிலுக்குள் சென்ற பெண்களுக்கு, பக்தர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால், பக்தர்கள் அந்த இரு பெண்களுக்கும் உதவி செய்தனர். ஆனால், இதை வைத்து சங் பரிவார் அமைப்புகள் தொடர்ந்து வன்முறை செய்து வருகின்றனர்' என்று கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisement