சமூக ஊடகங்களை இந்த வீடியோ புயல்போல் தாக்கியுள்ளது.
ஒவ்வொரு நாளும் ஜிம்மிற்கு செல்ல மோட்டிவேஷன் மிகவும் அவசியம். இந்த வீடியோ உங்களுக்கு தேவையான அனைத்து உடற்பயிற்சிக்கும் உத்வேகமாக இருக்கும். சமூக ஊடகங்கள இந்த வீடியோ புயல்போல் தாக்கியுள்ளது. ஒரு மினி ஆஸ்திரேலியா ஷெப்பர்ட் நாய் உடற்பயிற்சியினை கற்பிக்கிறது.
ஜனவரி 10ஆம் தேதி டெஸ்லா என்ற நாய் தனது கிராஸ்ஃபிட் திறன்களை இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிடப்பட்டது. இந்த வீடியோ இறுதியில் ட்விட்டரிலும் பகிரப்பட்டது. அங்கும் மில்லியன் கணக்கான முறை பார்க்கப்பட்டு வைரலானது.
இந்த வீடியோ பிரபலமான ட்விட்டரில் ‘ஆஸிஸ் டூயிங் திங்ஸ்' மறுபதிவு செய்யப்பட்டது. ஒரு உடற்பயிற்சி கூடத்திற்குள் படமாக்கப்பட்டுள்ளது. டெஸ்லா வகுப்பின் முன்புறத்தில் உருண்டு குதிக்கிறது. டெஸ்லாவின் தலைமைத்துவ திறன்கள் வகுப்பின் முடிவில் அவளுக்கு பரிசினை வழங்குகிறது.
விருப்பமான வீடியோவை கீழே காணலாம்:
இந்த வீடியோ 4.2 மில்லியன் முறை பார்க்கப்பட்டது. இன்ஸ்டாகிராமில் 92,000 முறை பார்க்கப்பட்டது. விதவிதமான கமெண்டுகளையும் பெற்றுள்ளது.
ஆறு வயதாக டெஸ்லா என்ற நாய் பலருக்கும் உடற்பயிற்சிக்கான உத்வேகத்தை அளிக்கிறது.
Click for more
trending news