This Article is From Apr 15, 2020

உலக சுகாதார அமைப்புக்கு வழங்கி வந்த நிதியை நிறுத்தியது அமெரிக்கா!

உலக நாடுகளுக்கு உரிய நேரத்தில் சுகாதார அவசரநிலையை அறிவிக்க உலக சுகாதார அமைப்பு தவறிவிட்டது என்றும், கொரோனா வைரஸ் பரவலை தவறாக நிர்வகித்த உலக சுகாதார அமைப்பின் பங்கை மதிப்பிடுவதற்கு ஒரு ஆய்வு நடத்தப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்புக்கு வழங்கி வந்த நிதியை நிறுத்தியது அமெரிக்கா!

உலக சுகாதார அமைப்புக்கு வழங்கி வந்த நிதியை நிறுத்தியது அமெரிக்கா (File)

ஹைலைட்ஸ்

  • Donald Trump has accused the WHO of mishandling coronavirus crisis
  • It is not the time to reduce resources of WHO, the UN chief says
  • The COVID-19 pandemic has killed more than 125,000 people worldwide
Washington:

உலக சுகாதார அமைப்பிற்கு வழங்கி வந்த நிதியை அமெரிக்கா நிறுத்துவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். 

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரசின் மையப்புள்ளியாக தற்போது, அமெரிக்கா மாறியுள்ளது. உலகளவில், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 125,000 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 20 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் டொனால்ட் ட்ரம்ப், உலக நாடுகளுக்கு உரிய நேரத்தில் சுகாதார அவசர நிலையை அறிவி்க்க உலக சுகாதார அமைப்பு தவறிவிட்டது என்றும், கொரோனா வைரஸ் பரவலை தவறாக நிர்வகித்த உலக சுகாதார அமைப்பின் பங்கை மதிப்பிடுவதற்கு ஒரு ஆய்வு நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரஸ் பரவல் குறித்த தவறான தகவலையும், அதை தடுப்பது குறித்து சரியான நடவடிக்கைகளை கையாளத் தெரியாமல் இருந்ததால் உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்கா சார்பில் வழங்கும் நிதியை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளேன். உலக சுகாதார அமைப்பில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என அனைவருக்கும் தெரியும்.

உலக சுகாதார அமைப்பு நடுநிலையாக செயல்பட்டு அனைத்து நாடுகளுக்கும் ஆலோசனை தெரிவிக்க வேண்டிய நிலையில் கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டது என்று அவர் குற்றம்சாட்டினார். 

உலகளவில் வேறெங்கும் இல்லாத அளவு அமெரிக்காவில், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,407 பேர் உயிரிழந்துள்ளனர். அதே போல பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டி உள்ளது. இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்புக காரணமாக 26,047 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,13,886 ஆக அதிகரித்துள்ளது.

முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்திந்த டிரம்ப், உலக சுகாதார அமைப்புக்கு அதிகப்படியான நிதியை அமெரிக்கா அளித்து வருகிறது. ஆனால், பயணக் கட்டுப்பாடு விதித்த நேரத்தில், எனது முடிவை அந்த அமைப்பு விமர்சனம் செய்து ஏற்றுக் கொள்ள மறுத்தது. 

இதுபோல், அவர்கள் பல விஷயங்களில் தவறு செய்துள்ளனர். கொரோனா குறித்து ஒரு மாதத்திற்கு முன்கூட்டியே அவர்கள் எச்சரித்திருக்க வேண்டும். ஆனால் அதை செய்யத் தவறி விட்டது. பல நேரத்தில் அந்த அமைப்பு தவறான முடிவுகளையே எடுக்கிறது. 

மேலும், சீனாவுக்கு ஆதரவாக செயல்படுகிறது. இது நல்லதற்கில்லை. நாங்கள் இனி மிகுந்த விழிப்புடன் செயல்படுவோம். உலக சுகாதார அமைப்பிற்கு செலவிடும் நிதியை நிறுத்தவும் தயங்க மாட்டோம், என்று கூறியிருந்தார். 
 

.