This Article is From Apr 04, 2020

மக்களை மாஸ்க் போடச் சொல்லும் அமெரிக்க அரசு… அதை செய்யாமலிருக்க டிரம்ப் சொல்லும் காரணம்!

சீனாவில் கடந்த ஆண்டு முதன்முதலாக கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. அப்போதிலிருந்து மருத்துவ வல்லுநர்கள்...

மக்களை மாஸ்க் போடச் சொல்லும் அமெரிக்க அரசு… அதை செய்யாமலிருக்க டிரம்ப் சொல்லும் காரணம்!

இந்த தற்காப்பு மாஸ்க்குகளுக்கு உலகளவில் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

ஹைலைட்ஸ்

  • உலகளவில் 10 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று
  • நேற்று ஒரே நாளில் மட்டும் அமெரிக்காவில் 1,480 பேர் கொரோனாவால் மரணம்
  • உலகளவில் 57,000 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளார்கள்
Washington:

அமெரிக்காவில் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது அமெரிக்க அரசு. உலகளவில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவில் 2 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்க அரசு, தனது குடிமக்கள் பொது இடங்களில் உலவும்போது முகத்துக்கு மாஸ்க் போட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. 

நேற்று ஒரே நாளில் மட்டும் அமெரிக்காவில் கொரோனோ தொற்று காரணமாக 1,480 பேர் மரணமடைந்துள்ளார்கள். கொரோனாவால் எந்த நாட்டிலும் ஒரே நாளில் இவ்வளவு பேர் மரணமடைந்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்தான், மக்கள் மாஸ்க் போட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது அமெரிக்க அரசு.

இது குறித்து அதிபர் டிரம்ப், “நாட்டில் உள்ள 33 கோடி மக்களும் பொது இடங்களில் உலவும்போது மாஸ்க் அணிய வேண்டும். இது ஒரு வாரத்துக்கு அமலில் இருக்கலாம். இந்த உத்தரவு கட்டாயம் கிடையாது. நீங்கள் செய்தேயாக வேண்டும் என்று கிடையாது. நான் செய்யப் போவது கிடையாது. ஆனால், சிலருக்கு அவசியமாக இருக்கலாம்,” என்று பேசியுள்ளார். 

அமெரிக்க அரசு நியமித்துள்ள அறிவியல் குழுவில் அங்கம் வகிக்கும் அந்தோணி ஃபாவுசி, “தற்போது வரும் ஆய்வு முடிவுகள், கொரோனா வைரஸானது தும்மினாலோ, இரும்பினாலோ அல்ல பேசினால் கூட பரவ வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது” என்று கூறியிருந்தார். இதைத் தொடர்ந்துதான் ‘மாஸ்க் போட வேண்டும்' என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

சீனாவில் கடந்த ஆண்டு முதன்முதலாக கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. அப்போதிலிருந்து மருத்துவ வல்லுநர்கள், இருமல் மற்றும் தும்மல் மூலம்தான் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது என்று தெரிவித்து வந்தனர். 

இந்த தற்காப்பு மாஸ்க்குகளுக்கு உலகளவில் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அமெரிக்க அளவிலும், ஐரோப்பாவிலும் இந்த தற்காப்பு மாஸ்க்களுக்குத் தொடர்ந்து தேவை அதிகமாக உள்ளன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுக்கு சீனாதான், இந்த மாஸ்க்குகளை ஏற்றுமதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது. 

இதை மனதில் கொண்டு டிரம்ப், “தங்களைத் தற்காத்துக் கொள்ள குடிமக்கள், சுத்தமான துணி மூலம் கூட முகத்தை மறைத்துக் கொள்ளலாம். மருத்துவ மாஸ்குகளை, அதிகம் தேவைப்படும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு விட்டுக் கொடுப்பது நல்லது,” என்றுள்ளார். 

.