Read in English
This Article is From Mar 07, 2019

மீண்டும் ட்ரெண்டிங்கில் ட்ரம்ப்... வைரல் வீடியோ..!

அமெரிக்காவில் அதிக அளவில் ஆப்பிள் நிறுவனம் முதலீடு செய்துள்ளது. இதற்காக உங்களை பாராட்டுகிறேன் மிஸ்டர். டிம் ஆப்பிள் என ட்ரம்ப் கூறினார்.

Advertisement
விசித்திரம் Edited by

அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப்பும் ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் கூக்கும்

அமெரிக்காவின் அதிபர் டொனால்டு ட்ரம்ப், பதவியேற்றது முதலே பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வருகிறார். தற்போது அவரது பேச்சு மீண்டும் ட்ரெண்டாகி வருகிறது.  

இந்த முறை ஆப்பிள் நிருவனத்தின் சிஇஓ டிம் கூக் குறித்தான பேச்சிற்குத்தான் ட்ரம்ப் ட்ரெண்ட் ஆகியுள்ளார்.

உலகம் முழுவதும் பிரபலமான நிறுவனமாக திகழ்வது ஆப்பிள். அந்த நிறுவனத்தின் சிஇஓ ஆக இருப்பவர் டிம் கூக்.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் கடந்த புதன் கிழமையில் நடந்த சந்திப்பில் டிம் கூக்கும் ட்ரம்ப்பும் பேசிக் கொண்டனர். அப்போது பேசிய ட்ரம்ப், டிம் கூக்கை டிம் ஆப்பிள் என அழைத்துள்ளார்.

Advertisement

‘நான் டிம்மிடம் அமெரிக்காவில் முதலீடு செய்யுங்கள் என கேட்டு வந்தேன். தற்போது அமெரிக்காவில் அதிக அளவில் ஆப்பிள் நிறுவனம் முதலீடு செய்துள்ளது. இதற்காக உங்களை பாராட்டுகிறேன் மிஸ்டர். டிம் ஆப்பிள்' என ட்ரம்ப் கூறினார்.

அந்த வீடியோ:

 

Advertisement

இந்த நிகழ்வு இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை இதுவரை 36 லட்சம் பேருக்கு மேல் பார்த்துள்ளனர்.

 

 

Advertisement

இந்த வீடியோவிற்கு பல நெட்டிசன்கள் பல மீம்களை உருவாக்கி ட்ரெண்ட் ஆக்கியுள்ளனர்.

 

 

Advertisement

இப்படி பெயரை மாற்றி அழைப்பது, சர்ச்சையான கருத்துகளை தெரிவிப்பது என எப்பவும் ட்ரெண்டிங் ஆகி கொண்டிருக்கிறார் ட்ரம்ப்.   

Advertisement