நான் கூடியமட்டில் புதினை சந்திக்க விரும்புகிறேன். நான் இந்தச் சந்திப்பை மறுக்கவில்லை என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறினார்.
Washington, United States: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஜி20 சந்திப்பின் போது ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க இருந்தார். ஆனால் தற்போது உக்ரைனிலிருந்து சென்ற பாய்மரப்படகு மற்றும் கப்பல்களை விடுவிக்காததால் அந்த சந்திப்பை ரத்து செய்துள்ளார்.
"தகவல்களின் படி இன்னும் உக்ரைனிலிருந்து ரஷ்யா சென்ற படகுகள், பாய்மரக்கப்பல்கள் நாடு திரும்பவில்லை. அதனால் நான் விளாதிமிர் புதினுடனான சந்திப்பை ரத்து செய்கிறேன்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் ட்ரம்ப் தெரிவித்துள்ளர்.
மேலும் இந்தப் பிரச்னைகள் முடிந்தவுடன் இந்தச் சந்திப்பு நிகழும் என்று தெரிவித்துள்ளார் ட்ரம்ப். இந்த அறிவிப்பு வெள்ளை மாளிகை பத்திரிக்கையாளர் சந்திப்பில் புதினை சந்திக்க இதுவே சிறந்த நேரம் என்று கூறிவிட்டு சென்ற சிறிது நேரத்தில் இது வெளியானது.
நான் கூடியமட்டில் புதினை சந்திக்க விரும்புகிறேன். நான் இந்தச் சந்திப்பை மறுக்கவில்லை என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறினார். வெள்ளை மாளிகை செயலாளர் சாரா சாண்டஸ் ''இது சிறிது நேரத்துக்கு முன் எடுக்கப்பட்ட முடிவு" என்று கூறினார்.
இது புதினுக்கு தெரிவிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு ''இரு தலைவர்களுக்கும் இடையேயான அலைபேசி அழைப்பில் என்ன பேசிக்கொண்டார்கள் என்பது குறித்து எனக்கு தெரியாது'' என்றார்.