அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க - மெக்ஸிகோ எல்லையில் சுவர் கட்டுவதற்கு நிதி ஒதுக்காததால் நாட்டில் அவசரநிலையை ட்ரம்ப் அமல்படுத்தியுள்ளார். இதனை ஜனநாயக கட்சியின் அரசியலமைப்புக்கு எதிரானது என குற்றம் சாட்டியுள்ளனர்.
குற்றங்களும், போதைப்பொருட்களும் கடத்தப்படுகிறது என்று கூறி புலம் பெயர்பவர்களுக்கு கட்டுப்பாட்டையும், தடையையும் விதித்தார் ட்ரம்ப்.
இடே பிரச்சனையை காரணம் காட்டி அரசின் ஒரு பாதியை முடக்கிய அதிபர் இப்போது மற்றோரு பாதி முடக்கப்படும் என்று வலியுறுத்துகிறார். இந்த விஷயம் குறித்து இன்னும் எதுவும் சொல்லாமல் இருக்கிறார் ட்ரம்ப். ஆனால் தொடர்ந்து இன்னும் சுவர் கட்ட பணமில்லை என்பதை மட்டுமே கூறிவருகிறார். இது ஜனநாயக கட்சிக்கு தன் மீது உள்ள வெறுப்பே காரணம் என்றும் கூறியுள்ளார்.
ட்ரம்ப் சுவர் கட்டுவதற்கா 5.7 பில்லியன் அமெரிக்க டாலரை நிதியாக ஒத்துக்க சொன்னார். இதற்காக அரசாங்கத்தை 35 நாட்கள் முடக்கினார். தற்போது இதே காரணத்தை முன்வைத்து அவசர நிலையை அறிமுகம் செய்துள்ளார். இதனால் ஜனநாயக மற்றும் குடியரசு கட்சிகளுக்கு இடையே பெரும் போரை ஏற்படுத்துகிறார் என்று கூறப்படுகிறது.
நான்சி பெலோசி, சக் ஸ்க்யூமருள்ளிட்டவர்கள் ட்ரம்ப் அரசையலமைப்பை மீறுகிறார். அரசாங்கத்தை பாதுகாக்க நீதிமன்றனம், மக்கள் மன்றம் இரண்டிலும் எங்கள் எதிர்ப்பை ட்ரம்புக்கு எதிராக பதிவு செய்வோம் என்றனர்.
நியூயார்க் மாகாணத்தின் அட்டர்னி ஜெனரல் நீதிமன்றத்தில் ட்ரம்ப்பை எதிர்க்க தயார் என்று கூறியுள்ளார். ஜனநாயக கட்சி வழக்கு போட்டால் அதனை நீதிமன்றத்தில் வெல்வோம் என்று கொக்கரிக்கிறார் ட்ரம்ப்.
தேசிய அவசரநிலை சட்டம் 1976ன் படி எப்படி ஒரு அதிபர் அவசர நிலையை அறிமுகம் செய்ய முடியுமோ, அதேபோல காங்கிரஸால் எதிர்க்கவும் முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)