Read in English
This Article is From Feb 01, 2019

2020ம் ஆண்டு அதிபர் தேர்தலுக்கான நிதி திரட்டலில் ட்ரம்ப் சாதனை!

2020 அதிபர் தேர்தல்: 75 சதவிகித பணத்தை நன்கொடையாளர்கள் மூலமாக நிதி திரட்டியுள்ளனர். 

Advertisement
உலகம்

2020 அதிபர் தேர்தல்: 2020 அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் மிகப்பெரிய ஆரம்பம் என்று இதனை கூறியுள்ளனர்.

Washington:

அமெரிக்க அதிபர் டொனால்ட் டரம்பின் பிரசாரம் மற்றும் அவரது சில வர்த்தக சமூகங்கள் மூலம் 2018ன் கடைசி மூன்று மாதங்களில் 21 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளனர். 2020 அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் மிகப்பெரிய ஆரம்பம் என்று இதனை கூறியுள்ளனர்.

புதிய பெடரல் தேர்தல் ஆணைய ஆவணங்களின் படி, சமீபத்திய நிதி திரட்டல் கணக்குகளை வெளியிடப்ப்பட்டுள்ளது. இதில் ட்ரம்ப் 129 மில்லியன் டாலரை திரட்டியுள்ளார். இது குறுகிய காலத்தில் திரட்டப்பட்ட அதிக நிதி என்று கூறப்படுகிறது.

நவம்பர் தேர்தலில் ட்ரம்பின் குடியரசு கட்சி நிறைய இடங்களை இழந்தது. அமெரிக்க - மெக்ஸிகோ எல்லையில் சுவர் கட்டுவதற்காக அரசை முடக்கியதும் ட்ரம்புக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

Advertisement

75 சதவிகித பணத்தை நன்கொடையாளர்கள் மூலமாக நிதி திரட்டியுள்ளனர். 

முன்பிருந்த அதிபர்களை போல அல்லாமல் ட்ரம்ப் 2020க்கான நிதியை அதிவேகமாகவே திரட்ட ஆரம்பித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement