Read in English
This Article is From Nov 03, 2018

கிரீன்கார்ட் குறித்த புதிய தகவல்களை வெளியிட்ட டிரம்ப்..!

அமெரிக்காவில் வசிக்கும் 600,000 இந்தியர்கள் கிரீன் கார்ட் மற்றும் நிரந்தர வசிப்பிடம் பெற காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
Indians Abroad

அமெரிக்கா மட்டுமே மிக விரிவான குடியேற்ற திட்டங்களை கொண்டுள்ளதாக டிரம்ப் கூறினார்.

Washington:

 

இந்தியர்கள் உட்பட திறமை வாய்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் கிரீன் கார்ட் பெற பல வருடங்களாக அமைதி காத்து வருகிறார்கள். அவர்கள் மீது பரிவு கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறிய போது, நாங்கள் எல்லாவற்றையும் சரியாக செய்து முடித்துள்ளோம். அதனால் அவர்கள் அமெரிக்காவினுள் நுழைய போகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

எல் சல்வடோர், ஹோண்டுராஸ், கட்மாலா பகுதியைச் சேர்ந்த 5,000 - 7,000 மக்கள் மெக்சிகோவின் அமெரிக்க எல்லைப்பகுதியை நோக்கி நகர்ந்து, அமெரிக்காவினுள் நுழைய முற்படும் இந்த சூழலில் டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பலர் நீண்ட நாட்களாக இந்த அறிவிப்பிற்காக காத்திருக்கிறார்கள். எல்லா விதிமுறைகளையும் சரியாக பின்பற்றி காத்திருந்தவர்கள், விரைவில் அமெரிக்காவினுள் நுழைவார்கள். ஏனெனில், பல நிறுவனங்கள் அமெரிக்காவிற்கு வர உள்ளன.

Advertisement

அவர்களுக்கு திறமையான தொழிலாளர்கள் தேவைப்படுவார்கள். சட்டத்திற்கு புறம்பாக நாட்டினுள் நுழைபவர்களால் ஏற்படும் நஷ்டத்தை சமாளிக்க இதுபோன்ற நடவடிக்கைகள் எடுப்பது அவசியமாக உள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

1970களில் 40 மில்லியன் கிரீன் கார்டுகளை கொடுத்துள்ளோம். இதன்மூலம் நிரந்தர வசிப்பிடம் மற்றும் குடியுரிமைக்கு அடித்தளமிட்டுள்ளோம். ஆனால், சட்டதிட்டங்களை மீறி எங்கள் பெருந்தன்மையை உடைப்பதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று டிரம்ப் கூறியுள்ளார்.

Advertisement
Advertisement