This Article is From Feb 23, 2020

அமெரிக்க அதிபரின் வருகையை எதிர்நோக்கிக்கொண்டிருக்கும் இந்தியா.

இந்த சந்திப்பின்போது இரு நாடுகளும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய வர்த்தக விதிமுறைகளைப் பற்றி விவாதிக்க வாய்ப்புள்ளது என்றும் இருப்பினும் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தம் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு

அமெரிக்க அதிபரின் வருகையை எதிர்நோக்கிக்கொண்டிருக்கும் இந்தியா.

In Ahmedabad, Donald Trump will participate in a roadshow with PM Modi. (File)

ஹைலைட்ஸ்

  • In a tweet, PM Modi welcomed US President Donald Trump to India
  • "It is an honour that he will be with us tomorrow," PM Modi said
  • Donald Trump, Melania Trump to travel to Ahmedabad, Delhi, Agra
New Delhi:

அமெரிக்க அதிபர் டிரம்ப் 24 மணி நேரத்தில் இந்தியா வர இருப்பதற்கு முன்பாகவே பிரதமர்  "POTUS @realDonaldTrump ஐ இந்தியா வரவேற்க எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. அகமதாபாத் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து அவர் நாளை எங்களுடன் இருப்பார் என்பது மரியாதைக்குரியதாக உள்ளதாகப் பிரதமர் மோடி இன்று பிற்பகல் டிவிட் செய்திருக்கிறார். 

அமெரிக்க ஜனாதிபதி மற்றும் அவருடைய மனைவி மெலனியாவுடன் நாளை இந்தியா வரவிருக்கிறார். பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் அகமதாபாத், புதுதில்லி மற்றும் ஆக்ரா போன்றவற்றிற்குப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

முன்னதாக பாகுபலி-2 திரைப்படத்தின் திருத்தப்பட்ட வீடியோவினை டிரம்ப் பகிர்ந்திருந்தார். இந்த வீடியோவில் படத்தின் கதாநாயகனுக்குப் பதிலாக டிரம்பின் முகம் மாற்றி வடிவமைக்கப்பட்டிருந்தது. முன்னதாக "இந்தியாவில் எனது சிறந்த நண்பர்களுடன் இருப்பதற்கு மிகவும் எதிர்நோக்குங்கள்!" திரு டிரம்ப் ட்வீட் செய்துள்ளார்.

உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானம் என்று சொல்லப்படுகின்ற சர்தார் பட்டேல் மைதானத்தில் நடைபெறவிருக்கும் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் இருவரும் பங்கெடுக்கிறார்கள். பின்னர் டிரம்ப் டெல்லியை அடைவதற்கு முன்பு ஆக்ராவைப் பார்வையிட இருக்கிறார். 

டிரம்புடன் ஒரு உயர் ஆற்றல்மிக்க தூதுக்குழு ஒன்று பயணிக்கின்றது. அதில் டிரம்பின் மகள் இவான்கா டிரம்ப் மற்றும் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் உள்ளனர். இவர்கள் இருவரும் டிரம்பின் மூத்த ஆலோசகர்களாவார்கள். 

“எங்கள் மதிப்புமிக்க விருந்தினருக்கு இந்தியா ஒரு மறக்க முடியாத வரவேற்பினை அளிக்கும். மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த வருகையானது, இரு நாடுகளுக்கிடையேயான நட்பினை உறுதிப்படுத்த மேலும் நீண்ட தூரம் செல்லும்.” என்று பிரதமர் மோடி கடந்த 12-ம் தேதி மிக மகிழ்ச்சியுடன் டிவிட் செய்திருந்தார். 

இந்த சந்திப்பின்போது இரு நாடுகளும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய வர்த்தக விதிமுறைகளைப் பற்றி விவாதிக்க வாய்ப்புள்ளது என்றும் இருப்பினும் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தம் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் சில தகவல் வந்தவண்ணமிருக்கின்றன. மேலும், இந்தியச் சந்தையில் அவர் பரவலான அணுகுமுறைகளை எதிர்பார்ப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

.