அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் இன்று இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
New Delhi: இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தற்போது தாஜ்மகாலை மனைவி மெலானியாவுடன் தாஜ்மஹாலைப் பார்வையிட்டு வருகிறார். அவருடன் மகள் இவாங்கா அவரது கணவர் ஜேரட் ஆகியோரும் தாஜ்மஹாலுக்கு சென்றுள்ளனர்.
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், இந்தியாவுக்கு முதல் முறையாக அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 2 நாள் பயணமாக டிரம்ப் வந்துள்ளார். அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் கடந்த வருடம் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற ஹவுடிமோடி நிகழ்ச்சியில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இது அமெரிக்கத் தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ட்ரம்ப்பின் வருகையைப் பரஸ்பர நடவடிக்கையாகப் பலர் பார்க்கிறார்கள், இது இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலையைச் சமாளிக்கப் போராடி வரும் நிலையில் பிரதமர் மோடி அமெரிக்காவின் ஆதரவைக் கோருவதற்கான வாய்ப்பை வழங்கும் என்கின்றனர். அதேபோல், இரு நாடுகளுக்கும் இடையிலான பதட்டமான வர்த்தக பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதற்கு மத்தியில் டிரம்பின் வருகை அமைந்துள்ளது.
இந்தியப் பயணத்துக்காக நேற்று இரவு வாஷிங்டனில் இருந்து புறப்படுவதற்கு முன்னதாக அவர் அளித்த பேட்டியில், ”பிரதமர் மோடி எனது நண்பர். இந்திய மக்களைச் சந்திப்பதில் ஆர்வமாக இருக்கிறேன்” என்றார்.
தொடர்ந்து, டிரம்ப் வருகை குறித்து பிரதமர் மோடி தனது ட்வீட்டர் பதிவில், அமெரிக்க அதிபர் டிரம்பை வரவேற்பதற்காக இந்தியா காத்திருக்கிறது. அவர் நம்முடன் இருப்பது பெருமிதம் தரக்கூடிய ஒன்றாகும். அகமதாபாத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைத் தொடங்குவோம்,' எனத் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் இந்திய வருகை குறித்த நேரடி தகவல்கள்:
'தீவிரவாதத்தை எதிர்த்து இந்தியாவும், அமெரிக்காவும் தீவிரமாக போராடுகிறது. ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளனர். அதன் தலைவர் அல் பக்தாதி கொல்லப்பட்டுள்ளார். தீவிரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தானுடன் இணைந்தும் அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. இப்படி செய்வதன் மூலம் தெற்காசிய பிராந்தியத்தில் அமைதியை நிலை நிறுத்த முடியும்.' - டிரம்ப்
''பாதுகாப்புத்துறையில் இந்தியாவுடன் 3 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும். அமெரிக்காவில்தான் வேலை வாய்ப்பின்மை சதவீதம் மிகக் குறைவாக உள்ளது. உலகின் சக்திமிக்க ஆயுதங்களை அமெரிக்கா வைத்துள்ளது.'' - டிரம்ப்
நமஸ்தே என்று கூறி உரையை தொடங்கிய டிரம்ப், ''இந்தியாவின் நம்பிக்கைகுரிய நாடாக அமெரிக்கா செயல்படும். இந்தியாவின் வளர்ச்சிக்காக மோடி இரவு பகலாக உழைக்கிறார்'' என்று பேசினார்.
அகமதாபாத் மைதானத்தில் உரையாற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.
மோட்டேரா மைதானத்தில் பிசிசிஐ தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய்ஷா உள்ளிட்டோர்.
மோட்டேரா மைதானத்தில் டிரம்ப், மெலனியா, பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர்.
அகமதாபாத் மைதானத்தில் குவிந்துள்ள ஆயிரக்கணக்கான மக்கள்
அமெரிக்க அதிபர் டிரம்பை காண ஆயிரக்கணக்கானோர் மோட்டரா மைதானத்தில் குவிந்துள்ளனர்.
அகமதாபாத் படேல் மைதானத்தை நோக்கி செல்லும் அதிபர் டிரம்பின் கார்கள்.
சபர்மதி ஆசிரமத்தில் ராட்டையை சுற்றிய டிரம்ப்.
பார்வையாளர்கள் பதிவேட்டில் கையெழுத்திட்ட டிரம்ப், மெலனியா டிரம்ப்
சபர்மதி ஆசிரமத்தில் உள்ள பார்வையாளர்கள் பதிவேட்டில் கையெழுத்திட்ட டிரம்ப், மெலனியா டிரம்ப்
மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்திய டிரம்ப்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மெலனியா டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் சபர்மதி ஆசிரமத்தில் மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தினர்.
டிரம்ப், மெலனியாவுக்கு சபர்மதி ஆசிரமத்தை சுற்றிக் காண்பிக்கும் பிரதமர் மோடி.
சபர்மதி ஆசிரமத்திற்கு பிரதமா மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப், அவரது மனைவி மெலனியா ஆகியோர் வந்துள்ளனர்.
தனி தனி கார்களில் பயணம் செய்யும் மோடி, டிரம்ப்!
அகமதாபத் விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமான பயணத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் மோடியும் தனி தனி கார்களில் பயணம் செய்கின்றனர்.
மாபெரும் வரவேற்புகளுடன் சாலை மார்க்கமாக பயணம்!!
பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து சபர்மதி ஆசிரமம் வரையிலான 22 கி.மீ. தொலைவுக்கு மாபெரும் வரவேற்புகளுடன் சாலை மார்க்கமான பயணத்தி வருகின்றனர்.
பாரம்பரிய நடனத்துடன் அமெரிக்க அதிபர் டிரம்ப், மெலனியாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. அமெரிக்க அதிபராக டிரம்ப் இந்தியாவுக்கு வந்திருப்பது இதுவே முதன்முறையாகும்.
முதன்முறையாக இந்தியா வருகை தந்த அமெரிக்க அதிபர் டிரம்ப்பை பிரதமர் மோடி ஆரத்தழுவி வரவேற்றார்.
டிரம்பை ஆரத்தழுவி வரவேற்றார் பிரதமர் மோடி
முதல்முறையாக டிரம்ப், மெலானியா டிரம்ப் இந்தியா வருகை
மோட்டேரா மைதானம் தான் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக இருக்கும் என்பதை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) கடந்த செவ்வாயன்று உறுதிப்படுத்தியது. இதுதொடர்பாக பசிசிஐ தனது ட்வீட்டர் பதிவில், அகமதாபாத் மோட்டேரா மைதானமானது, 1,10,000 பேர் அமரும் வகையில் இருக்கை திறன் கொண்ட உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாது ஆகும்.
மோட்டேரா மைதானத்தில் சவுரவ் கங்குலி!
நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி நடைபெற உள்ள மோட்டேரா மைதானத்திற்கு பிசிசிஐ தலைவர் சவுரங் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் வருகை தந்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் மெலனியா டிரம்ப் வருகையையொட்டி அகமதாபாத்தில் உள்ள மோட்டேரா ஸ்டேடியத்தில் நடந்த வரும் கலை நிகழ்ச்சிகள்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை வரவேற்க அகமதாபாத் விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி வந்தார். குஜராத் முதலமைச்சர் மற்றும் ஆளுநரும் அகமதாபாத் விமான நிலையம் வந்துள்ளனர்.
இந்தியில் ட்வீட் செய்த டிரம்ப்
இந்தியா செல்வதற்கு ஆர்வமாக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியில் பதிவிட்டுள்ளார்.