அதிபர் ட்ரம்ப் வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன்னை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார்
Washington: அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் கூறியுள்ள செய்தியில் '' அதிபர் ட்ரம்ப் வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன்னை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார் என்று கூறினார். ஆனால் சென்ற முறை செய்த தவறுகளை இந்த முறை செய்யப்போவதில்லை. அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளில் இருந்து வெளியேறிவிட்டது போன்ற விஷயங்கள் திரும்பாது" என்றார்.
வடகொரியா இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும், சிங்கப்பூரில் நடைபெற்ற முதல் சந்திப்பில் அணுஆயுத தளங்களை மூடுவதாக வடகொரியா தெரிவித்திருந்தது.
அமெரிக்காவின் ஆலோசனை அமைப்பு அடையாளம் காணப்பட்ட 20 அணுஆயுத தடங்களில் 13 இன்னமும் செயல்பாட்டில் உள்ளதாக கூறியுள்ளது. கிம் தனது ஆயுத கொள்கைகளை விட்டு சவாலை ஏற்க தயாராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
சென்ற முறை சந்தித்த போது சிங்கப்பூர் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு பல கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.