This Article is From Jan 19, 2019

"பிப்ரவரியில் மீண்டும் கிம் - ட்ரம்ப் சந்திப்பு நிகழலாம்" வெள்ளை மாளிகை

இந்த அறிவிப்பு வடகொரியாவின் முன்னாள் உளவாளியாக இருந்த கிம் யோங் சால்லின் அமெரிக்க‌ வருகைக்கு பிறகு முடிவாகியுள்ளது.

முதல் சந்திப்பில் நிகழ்ந்த தவறுகளை வடகொரியா சரிசெய்து கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது. 

WASHINGTON:

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வடகொரிய தலைவர் கிம்முடன் தனது இரண்டாவது சந்திப்பு பிப்ரவரி கடைசி வாரத்தில் இருக்கலாம் என்றும், ஆனால் இதற்காக பொருளாதார தடை நீக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளதாக வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்த அறிவிப்பு வடகொரியாவின் முன்னாள் உளவாளியாக இருந்த கிம் யோங் சால்லின் அமெரிக்க‌ வருகைக்கு பிறகு முடிவாகியுள்ளது. அவரது வருகையின் போது அணு ஆயுத ஒழிப்பு, தலைவர்கள் சந்திப்பு குறித்த விஷயங்களுக்கான சமிஞ்கைகள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அவர் அதிபர் ட்ரம்ப்பை கிட்டத்தட்ட 90 நிமிடங்கள் சந்தித்து பேசியதாக வெள்ளை மாளிகை தரப்பு கூறியுள்ளது. ஆனாலும், அமெரிக்கா வட கொரியா மீது வைத்துள்ள பொருளாதார தடைகள் தொடரும் என்று கூறப்பட்டுள்ளது. 

சிங்கப்பூர் சந்திப்புக்கு பிறகு ட்ரம்ப் கூறும்போது "வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தல்கள் இனி இருக்காது" என்றார். ஆனால் கிம் யாங் சால்லை சந்திப்பதற்கு ஒரு சில மணி நேரம் முன்பு வடகொரியாவால் பெரிய ஆபத்துகள் இருப்பதாக கூறியுள்ளார்.

ட்ரம்ப் - கிம் இருவருமே சந்திப்புக்கு விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், முதல் சந்திப்பில் நிகழ்ந்த தவறுகளை வடகொரியா சரிசெய்து கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது. 

அடுத்த சந்திப்புக்கான இடமாக வியட்நாம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி பாங்காக், ஹவாய் அல்லது மீண்டும் சிங்கப்பூரே கூட இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.