Read in English বাংলায় পড়ুন
This Article is From Apr 05, 2020

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளைக் கோருகிறார் டிரம்ப்!

தனது மருத்துவர்களின் ஆலோசனைக்குப்பின்பு தானும் இந்த மாத்திரைகளைப் பயன்படுத்தப்போவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

Advertisement
இந்தியா
Washington:

கொரோனா தொற்று அமெரிக்காவை மிகப்பெரிய அளவில் பாதித்திருக்கின்றது. 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா கண்டறிந்துள்ளது. கிட்டதட்ட 8 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் அந்நாட்டில் கொரோனா தொற்றால் இறந்திருக்கின்றனர் என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தங்கள் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய நபர்களுக்கு சிக்சையளிக்க ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை வழங்குமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை தெரிவித்தார்.

இந்தியாவில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருவதையடுத்து ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். இதனை டிரம்ப் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற கொரோனா வைரஸ் தடுப்பு மாநாட்டில் தெரிவித்திருந்தார்.

தனது மருத்துவர்களின் ஆலோசனைக்குப்பின்பு தானும் இந்த மாத்திரைகளைப் பயன்படுத்தப்போவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்தியா இந்த மருந்துகளை அதிகமாக உற்பத்தி செய்வதாகவும், இது இங்கு அதிக மக்களுக்கு தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

Advertisement

டிரம்புடன் ஒரு விரிவான கலந்துரையாடலைத் தான் மேற்கொண்டதாகவும், இந்தியா, அமெரிக்கா கூட்டாட்சியின் முழு பலத்தினையும் பயன்படுத்தி, அமெரிக்காவுக்கு நாங்கள் உதவ முயல்கின்றோம் என பிரதமர் மோடி ட்விட்டரில் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், பாதிக்கப்பட்டவர்கள் விரைவாக மீண்டு வர வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 1023 பேர் கொரோனா பாதிப்பால் மரணமடைந்துள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக்கேல் பாம்பியோ, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன் கலந்துரையாடினார். அதில் சர்வதேசிய அளவில் நாடுகளுக்கிடையிலான மருந்துகள் பரிவர்த்தனை மூலம் தொற்றைக் கட்டுப்படுத்த இயலும் என தெரிவித்துள்ளார்.

Advertisement
Advertisement