Washington, United States: அமெரிக்கா அதிபர் டிரம்ப் அறிவுரையின் பேரில் இந்தியாவிற்கும், துருக்கியிற்கும் வழங்கப்பட்ட வர்த்தக முன்னுரிமை நிலையை அமெரிக்கா அகற்ற விரும்புகிறது என அமெரிக்க வர்த்தகத் தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவும் சீனாவும் விலை உயர்ந்த வர்த்தக யுத்தத்தில் இருந்து ஒரு வெளியேற பேச்சுவார்த்தை நடத்த முயல்கின்றன. அமெரிக்கா உலகில் சில முக்கிய நட்பு நாடுகளை வர்த்தக முன்னுரிமை நாடுகள்( Generalized System of Preferences - GSP) என்று பட்டியலில் வைத்து இருக்கிறது. இதில் இந்தியா, துருக்கி உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், தேவையான சந்தை அணுகலை அனுமதிக்கும் என்ற உத்தரவாதங்களை இந்தியா வழங்க தவறிவிட்டது என்றும் துருக்கி பொருளாதார ரீதியாக வளர்ச்சி கண்டுவிட்டதால் இனி அந்த நாடு தகுதி பெறாது என அமெரிக்க வர்த்தக அலுவலக பிரிதிநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வர்த்தக முன்னுரிமை பட்டியலில் இருப்பதன் மூலம் இந்தியா 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை இந்தியா வரி இல்லாமல் வர்த்தகம் செய்ய முடியும். உலகில் GSP மூலம் அதிக பலன் பெறும் நாடு இந்தியாதான். இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பல பொருட்களுக்கும் அமெரிக்காவில் இறக்குமதி வரி விதிக்கப்படுவதில்லை.
இதன் மூலம் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் சுமார் 5 புள்ளி 6 பில்லியன் டாலர் மதிப்புடைய பொருட்களுக்கான வரிச்சலுகைகள் ரத்தாக கூடும். இந்தியா அமெரிக்க பொருட்கள் மீது மோசமாக வரி விதிப்பதே இதற்கு முக்கிய காரணம்.
மேலும் படிக்க - "தீவிரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுத்தாக வேண்டும்: அமெரிக்கா வலியுறுத்தல்"