Read in English
This Article is From Feb 07, 2019

"ஒரு வாரத்தில் 100 சதவிகித ஐஎஸ்ஐஎஸ் வீழ்த்தப்படும்" - ட்ரம்ப்

சமீபத்தில் சிரியாவிலிருந்து 2000 வீரர்களை அமெரிக்காவுக்கு திரும்ப உத்தரவிட்டார். மேலும் இந்த போரை வெற்றி என்றும் அறிவித்தார்

Advertisement
உலகம்

"இன்னும் ஒருவாரத்தில் 100 சதவிகிதம் ஐஎஸ்ஐஎஸ் அகற்றப்படும்" என்று கூறினார் ட்ரம்ப் .

Washington:

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சிரியாவிலிருந்து ஐஎஸ்ஐஎஸ் முழுமையாக இன்னும் ஒரு வாரத்தில் ஒழிக்கபட்டுவிடும் என்று எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார். இதற்காக தீவிரவாதிகளுடன் தொடர்ந்து போரிட்டு வருவதாவகவும் கூறியுள்ளார்.

வாஷிங்டனில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் ஐஎஸ்ஐஎஸ்-க்கு எதிரான எதிர்கால போர்கள் குறித்து பேசினார் ட்ரம்ப். சமீபத்தில் சிரியாவிலிருந்து 2000 வீரர்களை அமெரிக்காவுக்கு திரும்ப உத்தரவிட்டார். மேலும் இந்த போரை வெற்றி என்றும் அறிவித்தார்.

70 நாடுகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண்ட அந்த சந்திப்பில் ட்ரம்ப், "ஐஎஸ்ஐஎஸ்  வசம் இருந்த அனைத்து இடங்களும் அமெரிக்க படைகளாலும், கூட்டணி படைகளாலும் கைப்படற்றப்பட்டுள்ளன. அங்கு அமைதிநிலை திரும்பி வருகிறது" என்றார்.

Advertisement

இன்னும் ஒருவாரத்தில் 100 சதவிகிதம் ஐஎஸ்ஐஎஸ் அகற்றப்படும் என்று கூறினார். அமெரிக்க படைகள் சிரியாவில் இன்னும் தங்கி இருப்பது மிகவும் சிரமமானது. மற்ற நாடுகளிடமிருந்து நிதி உதவிகள் பெறுவதும் சிரமமாகும் என்றார். 

ஐஎஸ்ஐஎஸ்-ன் கடைசி நபர் வரை அனைவரையும் வீழ்த்திவிடுவோம். மக்களை தீவிரவாதத்திலிருந்து கப்பாற்றுவது கடமை என்றார்.

Advertisement
Advertisement