This Article is From Aug 24, 2018

“என் பதவி பறிக்கப்பட்டால் அமெரிக்க பொருளாதாரம் நிலை குலையும்” - ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டிரம்ப், தனது பதவி பறிக்கப்பட்டால், அமெரிக்க பொருளாதாரம் நிலை குலையும் என்று கூறியுள்ளார்

“என் பதவி பறிக்கப்பட்டால் அமெரிக்க பொருளாதாரம் நிலை குலையும்” - ட்ரம்ப்
Washington, United States:

அமெரிக்க அதிபர் டிரம்ப், தனது பதவி பறிக்கப்பட்டால், அமெரிக்க பொருளாதாரம் நிலை குலையும் என்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார்.

“நான் பதவியில் இருந்து நீக்கப்பட்டால், பங்குச் சந்தைகள் சின்னா பின்னமாகும். அனைவரும் ஏழைகளாக மாறுவர்” என்று ஃபாக்ஸ் அண்ட் ஃபிரெண்ட்ஸ் நிகழ்ச்சியில் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப் மீது தொடந்து வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விக்கு இவ்வாறு அவர் பதில் கூறியுள்ளார். முன்னதாக, ட்ரம்பின் வழக்கறிஞர் மைக்கேல் கோஹன், ட்ரம்பை அமெரிக்க பொருளாதார சட்டங்களை மீற,தன்னை வற்புறுத்தியதாக தெரிவித்ததும் சர்ச்சைய ஏற்படுத்தியது.

மேலும் நிகழ்ச்சியில் பேசிய ட்ரம்ப், தனது ஆட்சியில் உருவாக்கப்பட்ட வேலை வாய்ப்புகள் மற்றும் பொருளாதார முன்னேற்றங்கள் எல்லாம், ஹிலாரி கிளின்டன் ஆட்சிக்கு வந்திருந்தால் படு மோசமான நிலைக்கு சென்றிருக்கும் என்றார்.

“ பெரும் சாதனைகளை செய்துள்ள ஒருவரின் பதவி எப்படி நீங்கள் பறிப்பீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை” என்றார் அவர்.

.