Read in English
This Article is From Jul 02, 2018

'டிரம்ப்' முகம் பொறிக்கப்பட்ட போதை மாத்திரிகளை கைப்பற்றிய காவல் துறையினர்

அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முக வடிவிலான எக்ஸ்டசி வகை போதை மாத்திரைகள் கைப்பற்றியுள்ளனர்

Advertisement
விசித்திரம்

அமெரிக்காவின், இந்தியானா மாகாண காவல் துறையினர் போதை பொருள் சோதனையில் ஈடுபட்ட போது, அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முக வடிவிலான எக்ஸ்டசி வகை போதை மாத்திரைகள் கைப்பற்றியுள்ளனர்.

கடந்த ஆறு நாட்களாக நடைப்பெற்று வரும் சோதனையில், 129 போதை பொருள் விற்பனையாளர்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள் இந்தியானா காவல் துறையினரால் கைப்பற்றப்படுள்ளது.

‘அப்ரேஷன் ப்ளூ அன்வில்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த நடவடிக்கையில் மத்திய இந்தியானா பகுதியை சேர்ந்த ஒன்பது துறையினர் ஆறு நாட்களாக தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சோதனை நடவடிக்கையின் போது, அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் முகம் பொறிக்கப்பட்ட வகையிலான எக்ஸ்டசி போதை பொருட்களை காவல் துறையினர் கைப்பற்றினர். அதில் “கிரேட் அகெய்ன்” என எழுதப்பட்டிருந்தது.

கொகைய்ன், ஹெரோயின், மாரிஜூவானா, சைலோசிபின் காளான்கள், மற்றும் பெயர் கண்டறிய முடியாத பல மருந்துகளை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

இதற்கு முன்னதாக, கடந்த ஆண்டு ஜெர்மனி நாட்டில் 5000க்கும் மேற்பட்ட ஆரஞ்சு நிற டிரம்பின் முக வடிவிலான போதை மாத்திரைகளை காவல் துறையினர் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த மாத்திரைகளில், ‘டிரம்ப்’ என எழுதப்பட்டிருந்தது.

சென்ற வாரம், ஃபிஃபா கோப்பை மாதிகரிளில் கடத்தப்பட்ட போதை பொருட்களை அர்ஜென்டினா காவல் துறையினர் கைப்பற்றியிருந்தனர்.

Advertisement