ஹைலைட்ஸ்
- இந்த 'ஸீரோ டாலரன்ஸ்' பாலிசி கடந்த ஏப்ரலில் அமலானது
- இந்த நடைமுறைக்கு பலத்த எதிர்ப்பு வந்தது
- இதையடுத்து, அந்த பாலிசியில் மாற்றம் செய்துள்ளார் ட்ரம்ப்
Washington:
அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக குடியேறுபவர்களை எல்லையில் தடுக்கும் நடைமுறை கறாராக பின்பற்றப்பட்டு வருகிறது. அதில், ஒரு முக்கிய மாற்றத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் செய்துள்ளார்.
அமெரிக்காவுக்கு மற்ற நாடுகளிலிருந்து சட்ட விரோதமாக குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. குறிப்பாக, அதன் அண்டை நாடான மெக்சிக்கோவில் இருந்து தினம் தினம் மக்கள் அமெரிக்காவுக்குள் வந்த வண்ணம் உள்ளனர். இவர்களில் பலரும் அமெரிக்காவின் சட்டங்களுக்கு புறம்பாகவே குடியேறி வருகின்றனர். இப்படி வருபவர்களைத் தடுக்க ‘ஸீரோ டாலரன்ஸ் பாலிசி’ என்ற நடைமுறையை அமெரிக்க அதிபர் ட்ரம்ப நடைமுறைப்படுத்தினார். இந்த பாலிசியால், அகதிகளாக ஒரு நாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு வரும் ஆண்கள், அவர்கள் குடும்பங்களிடமிருந்து பிரிக்கப்படுவர். பின்னர், அந்த ஆண்கள் சிறையில் அடைக்கப்படுவர். குழந்தைகள் உட்பட குடும்ப உறுப்பினர்கள் வேறொரு இடத்தில் தங்கவைக்கப்படுவர்.
இதனால், பல குழந்தைகள் தங்களது குடும்பங்களைப் பிரிந்து வாடும் நிலை உருவாகியது. இந்நிலையில் தான், குடும்பத்தைப் பிரிக்கும் இந்த நடைமுறைக்கு முடிவு கட்டும் வகையில் விதியில் மாற்றம் செய்து கையெழுத்திட்டுள்ளார் அதிபர் ட்ரம்ப்.
இதையடுத்து அவர், ‘மிக மிக வலிமையான எல்லைகளை நாம் உருவாக்கப் போகிறோம். ஆனால், அகதிகளாக வரும் குடும்பங்களை பிரிக்கப் போவதில்லை. குடும்பங்கள் பிரிக்கப்படுவது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை’ என்று கூறியுள்ளார்.
அகதிகளாக வரும் குடும்பங்களைத் தங்கவைப்பதற்கு மட்டும் அமெரிக்காவின் டெக்சாஸ் மற்றும் பென்சில்வேனியா மாகாணங்களில் இரண்டு மையங்கள் உள்ளன. இதில் மொத்தம் 3,000 படுக்கை வசதிகள் கொண்ட அறைகள் இருக்கின்றன. ஆனால், சென்ற மாதம் மட்டும் 2,342 குழந்தைகள் இந்த மையங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
ஸீரோ டாலரன்ஸ் பாலிசி குறித்து ட்ரம்ப், ‘தற்போது குடும்பங்கள் பிரிக்கப்பட மாட்டாது என்ற புதிய நடைமுறையால், பாலிசியில் பெரிய மாற்றம் எதுவும் செய்யவில்லை. கடந்த ஏப்ரல் மாதம் அமல் செய்யப்பட்ட இந்த பாலிசி தொடர்ந்து கட்டுப்பாடுடன் செயல்படுத்தப்படும்’ என்றார். இந்த பாலிசியின் மூலம், சட்டத்துக்கு புறம்பாக அமெரிக்காவுக்குள் வரும் அனைவரின் மீதும் வழக்கு தொடர முடியும். இது குழந்தைகள் கொண்ட குடும்பங்களுக்கும் பொருந்தும்.
(हेडलाइन के अलावा, इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है, यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)