This Article is From Jun 23, 2020

தகுதி அடிப்படையில் H-1B விசா வழங்க அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு!

இந்த ஆண்டு இறுதி வரை H-1B விசா மற்றும் பிற பணி விசாக்களை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

தகுதி அடிப்படையில் H-1B விசா வழங்க அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு!

இந்த ஆண்டு இறுதி வரை H-1B விசா மற்றும் பிற பணி விசாக்களை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

ஹைலைட்ஸ்

  • தகுதி அடிப்படையில் H-1B விசா வழங்க அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு!
  • H-1B விசா மற்றும் பிற பணி விசாக்களை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு
  • இதன் மூலம் அமெரிக்க ஊழியர்களின் வேலைவாய்ப்பு பாதிக்காது
Washington:

H-1B விசா முறையை "சீர்திருத்த" மற்றும் தகுதி அடிப்படையில் வழங்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், தகுதி அடிப்படையிலான குடியேற்ற முறைக்கு மாறுவதாகவும், இந்த ஆண்டு இறுதி வரை H-1B விசா மற்றும் பிற பணி விசாக்களை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார். மேலும், திறமையான தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்கும் அமெரிக்க வேலைகளைப் பாதுகாப்பதற்கும் குடியேற்ற முறையை டிரம்ப் நிர்வாகம் சீர்திருத்தும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த புதிய சீர்திருத்த நடவடிக்கையால், H-1B விசா திட்டத்தில் அமெரிக்காவில் பணிபுரிய வேண்டுமென்றால், அதிக சம்பளம் பெறும் ஊழியர்களுகளாகவும், அதிக திறன் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும். அவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. 

மேலும் அதில், இந்த புதிய சீர்திருத்தங்கள் அமெரிக்க ஊழியர்களின் ஊதியத்தைப் பாதுகாக்கவும், அதிக திறமை வாய்ந்த வெளிநாட்டவர்கள் மட்டுமே அந்நாட்டிற்குள் நுழைய முடியும் என்றும், இதன் மூலம் அமெரிக்க ஊழியர்களின் வேலைவாய்ப்பு பாதிக்காது என்பதையும் உறுதிப்படுத்த உதவும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக மூத்த நிர்வாக அதிகாரி ஒருவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, தகுதி அடிப்படையில் H-1B விசா திட்டத்தை சீர்படுத்தி, தகுதி அடிப்படையில் வழங்குவதன் மூலம் அவர் நிரந்திர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். அமெரிக்க வேலைகளை பாதுகாப்பது குறித்து அவர் அடிக்கடி பேசுவதை நீங்கள் கேட்டிருப்பீர்கள், அதேபோல், சிறந்ததை பெறுவது குறித்து அவர் பேசுவதையும் கேட்டிருப்பீர்கள் இந்த சீர்திருத்தம் அந்த இரண்டையும் செய்யும் என்று அவர் கூறினார்.

ஒவ்வொரு ஆண்டும் 85,000 H-1B விசாக்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அந்த வகையில், கடந்த வருடம் மட்டும் 2,25,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். 

இந்த ஆண்டு வரை சீரற்ற முறையிலே விசாக்கள் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில், இந்த முறையை சீர்படுத்த சம்பள அடிப்படையில் தரவரிசைப்படுத்த அதிபர் டிரம்ப் எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். அதனால், 2,25,000 விண்ணப்பங்கள் வந்தாலும், அதில் அதிக சம்பளம் பெறும் 85,000 பேருக்கு மட்டுமே விசா வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

.