அமெரிக்க அதிபர் இப்படியொரு கருத்தை சொல்லி இருந்தாலும், அந்நாட்டு ராணுவ அமைச்சர் மார்க் எஸ்பர்...
ஹைலைட்ஸ்
- Iran-க்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராடி வருகிறார்கள்
- ஈரான், பயணிகள் விமானத்தை சுட்டுவீழ்த்தியதால் போராட்டம் வெடித்துள்ளது
- இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாகத்தான் ட்ரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்
Washington: அமெரிக்கா - ஈரான் இடையில் போர் மூளும் என்று அஞ்சப்பட்டு வரும் நிலையில், அமெரிக்காவின் அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஈரானுக்கு ஒரு புதிய எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானில் சமீபத்தில் பயணிகள் விமானத்தை அந்நாட்டு ராணுவம் ‘தவறுதலாக' சுட்டுவீழ்த்தியது. 176 பேர் மரணமடைந்த அந்த சம்பவத்திற்கு எதிராகத்தான் இப்போது ஈரான் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ட்ரம்ப், போராட்டக்காரர்களுக்கு எதாவது ஆனால் நிலைமை மோசமாகும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“ஈரான் தலைவர்களே, உங்கள் போராட்டக்காரர்களை கொன்றுவிடாதீர்கள். உலகமே உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. மிக முக்கியமாக, அமெரிக்கா உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது,” என்று ட்விட்டர் மூலம் எச்சரித்துள்ளார் ட்ரம்ப்.
அமெரிக்க அதிபர் இப்படியொரு கருத்தை சொல்லி இருந்தாலும், அந்நாட்டு ராணுவ அமைச்சர் மார்க் எஸ்பர், “ஈரானுக்கு எந்தவிதக் நிபந்தனைளையும் விதிக்காமல் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். ஈரானை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வர நாங்கள் தயாராகவே இருக்கிறோம்,” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஈரான் நாட்டு ராணுவத் தளபதி காசெம் சுலைமானியை யாரும் எதிர்பாராத விதமாக அதிபர் டொனால்டு ட்ரம்பின் உத்தரவின் பேரில் கொன்றது அந்நாட்டு ராணுவம். அதைத் தொடர்ந்து ஈரான், ஈராக்கிலிருந்த அமெரிக்க ராணுவத முகாம்கள் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவம் நடந்த அதே நாளில், ஈரானிலிருந்து உக்ரைனுக்கு சென்று கொண்டிருந்த உக்ரைனின் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 176 பேரும் மரணமடைந்தார்கள்.
உலக நாடுகளை சோகத்தில் ஆழ்த்திய இந்த சம்பவத்தில் ஈரானின் பங்கு இருக்கும் என்ற சந்தேகம் எழுந்தது. அதிபர் ட்ரம்ப் மட்டுமல்லாமல், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடும், “உக்ரை விமான விபத்துக்கு ஈரான் காரணமாக இருக்கலாமோ என்று சந்தேகம் உள்ளது,” எனறார். இதைத் தொடர்ந்து, யாரும் எதிர்பாராத வகையில் ஈரான், “உக்ரைன் விமானத்தைத் தவறுதலாக நாங்கள்தான் சுட்டு வீழ்த்திவிட்டோம்,” என்று பகீர் கிளப்பும் விளக்கத்தைக் கொடுத்தது. இதனால் பிரச்னை பூதாகரமாகியுள்ளது.