"பொலோசி , டி-காலிஃப் ஆகியோர் ட்ரம்ப்பின் ட்விட்டை நாட்டை பிரிக்கும் செயல், பிரிவினை வாதத்தை தூண்டுகிறார் ட்ரம்ப்" என்றனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 4 காங்கிரஸ் பெண் பிரதிநிதிகளை அவர்களது நாட்டுக்கே திரும்ப சென்று அங்குள்ள குற்றங்களை சரிசெய்துவிட்டு பின் இங்கு வந்து பேசுங்கள் என்று கூறியது சர்ச்சையாகியுள்ளது. இதில் ஜனநாயக கட்சியை சேர்ந்த பெலோசியையும் குறிப்பிட்டுள்ளார்.
பொலோசி , டி-காலிஃப் ஆகியோர் ட்ரம்ப்பின் ட்விட்டை நாட்டை பிரிக்கும் செயல் , பிரிவினை வாதத்தை தூண்டுகிறார் ட்ரம்ப் என்று தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
தொடர்ந்து இந்த பிரதிநிதிகள் மீது தனது எதிர்ப்பை ட்ரம்ப் பதிவு செய்து வருகிறார். பெலோசி, அயன்னா, ரஷிதா, அலெக்ஸான்டரியா ஆகியோர் தங்களது எதிர்ப்பை ட்ரம்புக்கு எதிராக தெரிவித்து வந்தனர். அவர்கள் ட்ரம்பின் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தெரிவித்த கருத்துகளுக்கு பின்னால் இப்படி ஒரு அறிவிப்பை ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தச் சட்டத்தின் மூலம் புலம்பெயர்ந்தவர்களின் குடும்பத்தை சொந்த நாட்டுக்கே அனுப்பும் எண்ணத்தை திணித்து வருகிறார் ட்ரம்ப்.
ட்ரம்ப் கோல்ஃப் ஆட விர்ஜீனியா கிளம்பும் முன் சரமாரியான ட்விட்கள் மூலம் இவர்களை விமர்சித்துள்ளார்.
தனது ட்விட்டில் ''முற்போக்கு சிந்தனையுள்ள ஜனநாயக காங்கிரஸ் பெண்கள், எந்த நாடுகளிலிருந்து வந்தார்களோ அந்த நாடுகள் எவ்வளவு மோசமாக, ஊழல் நிறைந்ததாக உள்ளது என்பதை பார்க்க வேண்டும். ஆனால் அவர்கள் நாங்கள் நடத்தும் அமெரிக்க மக்களின் அரசை, உலகின் சக்தி வாய்ந்த அரசை விமர்சிக்கிறார்கள்" என்றார்.
"இவர்கள் நால்வரும் 2018 தேர்தலில் வென்றவர்கள். அவர்களை அவர்களது சொந்த ஊரில் உள்ள பிரச்சனையை தீர்த்துவிட்டு அமெரிக்கா பற்றி பேசவும் என்று கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் திரும்ப வந்து அவர்கள் எப்படி தீர்வு சொல்லியுள்ளனர் என்பதை கூற வேண்டும். அங்குதான் உங்கள் உதவி தேவைப்படுகிறது. பெலோசி உடனடியாக தனது பயண ஏற்பாடுகளை செய்துகொள்வார்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பெலோசி தனது கூர்மையான வரிகளால் பதிலளித்துள்ளார். "இவரது நோக்கம் சிறந்த அமெரிக்காவை உருவாக்குவதல்ல... வெள்ளையர்களுக்கான அமெரிக்காவை உருவாக்குவது" என்றார். வேற்றுமையில் ஒற்றுமையே நமது பலம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்னொரு பிரதிநிதியான ஒமர் ''நாங்கள் பதவியேற்கும் போது அமெரிக்க குடிமக்கள் என்றுதான் கூறியுள்ளோம் என்பதை ட்ரம்ப் உணர வேண்டும்" என்றார்.
பெர்ஸ்லே, ட்ரம்ப் நிறவெறியை தூண்டுகிறார் என்று குறிப்பிட்டுள்ளார், நால்வரும் ட்ரம்புக்கு எதிரான கருத்துக்களை தெரிவிக்க இந்த விஷயம் பரபரப்பானது.
அனைவரையும் ஒன்றிணைக்க ட்ரம்பின் இந்த செயல்கள் உதவுகிறது. ட்ரம்பை எதிர்க்க அனைவரும் ஒரு அணியாக திரள வேண்டும் என்ற நிலை உருவாகியிருப்பதாக பிரதிநிதி டெப்பி கூறியுள்ளார்.
இது குறித்து குடியரசு கட்சியை சேர்ந்தவர்கள் கருத்து தெரிவிக்காமல் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு ஒபாமா அமெரிக்கரே இல்லை என்று கூறி பின்னர் ட்ரம்ப் ஒப்புக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து குடியுரிமை தொடர்பாக ட்ரம்ப் தெரிவித்து வரும் தகவல்கள் சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாகவே அமைந்து வருகிறது என்று அமெரிக்க பிரதிநிதிகளும், மக்களும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)