San Francisco: சான் ஃப்ரான்ஸிஸ்கோ: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கூகுள் தேடுபொறி மீண்டும் தற்போது விவாதப் பொருளாகியுள்ளது. இந்த முறை 'இடியட்' என்ற வார்த்தை தேடலுக்கு டொனால்ட் ட்ரம்பின் புகைப்படங்கள் வந்திருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
ட்ரம்பின் மீதான இந்த சமீபத்திய இணைய தாக்குதல், சில இணைய செயற்பாட்டாளர்கள் கூகுள் அல்காரிதத்தை மாற்றி ட்ரம்பின் புகைப்படத்துடன் 'இடியட்' என்ற வார்த்தையை சேர்த்து செய்துவரும் பிரச்சாரத்தின் விளைவாக நடைபெற்றுள்ளது என சிஎன்ஈடி தெரிவித்துள்ளது.
தி கார்டியனில் வந்துள்ள செய்தியின் படி, ரெட்டிட் பயனாளர்கள் ட்ரம்பின் புகைப்படம் மற்றும் 'இடியட்' என்ற வார்த்தை அடங்கிய ஒரு பதிவை அதிகம் பிரபலப்படுத்தியதன் காரணமாக இந்த ட்ரெண்ட் ஆரம்பித்தது.
ட்ரம்பின் கொள்கைகளில் மகிழ்ச்சியாக இல்லாத மக்களால் முன்னெடுக்கப்படும் இந்த பிரச்சாரம், ட்ரம்பின் படங்களோடு "முட்டாள்" என்ற வார்த்தையை இணைப்பதற்கான ஒரு இணைய போராட்டமாக வடிவெடுத்துள்ளது.
கூகுள் தேடல்களில் இடம்பெற்றிருக்கும் தகவல்களுக்கு முன்னுரிமை அளித்து உதவியதன் மூலம், கூகுள் அல்காரிதம் அந்த நிறுவனத்தின் வளர்ச்சியில் பெரும் பங்கு ஆற்றியுள்ளது. ஆனால் சில சமயங்களில் அது சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளது.