This Article is From Feb 20, 2019

‘’இந்தியாவும், பாகிஸ்தானும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்’’ – ட்ரம்ப் வலியுறுத்தல்

இந்தியாவும், பாகிஸ்தானும் ஒற்றுமையுடன் செயல்பட்டால் அதனால் நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

‘’இந்தியாவும், பாகிஸ்தானும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்’’ – ட்ரம்ப் வலியுறுத்தல்

புல்வாமா தாக்குதல் கொடூரமாக உள்ளது என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ஹைலைட்ஸ்

  • புல்வாமா தாக்குதல் குறித்து விரைவில் அறிக்கை வெளியிடுகிறது அமெரிக்கா
  • இந்தியாவும் பாக்.-ம் ஒற்றுமையுடன் செயல்பட அமெரிக்கா வலியுறுத்தல்
  • தீவிரவாதிகளுக்கு எதிராக பாக். நடவடிக்கை எடுக்க வேண்டும்: அமெரிக்கா
Washington:

புல்வாமா தாக்குதல் கொடூரமானது என்றும், இந்தியாவும் பாகிஸ்தானும் ஒற்றுமையுடன் செயல்பட்டால் நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார்.

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம்தேதி ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் தமிழக வீர்ர்கள் சுப்ரமணியன், சிவச்சந்திரன் உள்பட 40 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் புல்வாமா தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்துள்ள பதில்-

‘'புல்வாமா தாக்குதல் குறித்து பல தகவல்கள் எனக்கு கிடைத்துள்ளன. அதுபற்றி சரியான நேரத்தில் நாங்கள் எங்களது நிலைப்பாட்டை தெரிவிப்போம். இந்தியாவும், பாகிஸ்தானும் ஒற்றுமையுடன் செயல்பட்டால் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.

புல்வாமா தாக்குதல் மிகவும் கொடூரமாக உள்ளது. அதுபற்றிய தகவல்களை சேகரித்து வருகிறோம். காஷ்மீர் தாக்குதல் குறித்த எங்களது நிலைப்பாட்டை அறிக்கையாக வெளியிடுவோம்''

இவ்வாறு ட்ரம்ப் கூறினார். காஷ்மீர் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தீவிரவாதத்தை ஒழிப்பதில் இந்தியாவுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்று அமெரிக்கா தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

.