This Article is From Jan 05, 2020

ஈரானின் 52 முக்கிய இடங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்; டிரம்ப் எச்சரிக்கை

ஈரானின் புரட்சி பாதுகாப்பு படை தளபதி படுகொலை குறித்த டிரம்ப் தனது ட்வீட்டர் பதிவில், 1979ம் ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கி ஒரு வருடத்திற்கும் மேலாக தெஹ்ரானில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பிணைக் கைதிகளாக 52 அமெரிக்கர்கள் இருந்ததாக தெரிகிறது.

ஈரானின் 52 முக்கிய இடங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்; டிரம்ப் எச்சரிக்கை

ஈரானில் 52 இடங்கள் மீது அமெரிக்கா குறிவைத்து வருவதாக டிரம்ப் எச்சரிக்கை

Washington:

ஈரானில் 52 இடங்கள் மீது அமெரிக்கா குறிவைத்து வருவதாகவும், ஒருவேளை இஸ்லாமிய குடியரசு, அமெரிக்க பணியாளர்கள் அல்லது சொத்துக்களைத் தாக்கினால் எங்களது எதிர்வினை மிக மோசமானதாக இருக்கும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

ஈரானின் புரட்சி பாதுகாப்பு படை தளபதி படுகொலை குறித்த டிரம்ப் தனது ட்வீட்டர் பதிவில், 1979ம் ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கி ஒரு வருடத்திற்கும் மேலாக தெஹ்ரானில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பிணைக் கைதிகளாக 52 அமெரிக்கர்கள் இருந்ததாக தெரிகிறது. 

நாங்கள் குறிவைத்துள்ள இந்த இடங்கள் "ஈரான் மற்றும் ஈரானிய கலாச்சாரத்திற்கு, மிக உயர்ந்த மட்டத்தில் முக்கியமானவை" என்று டிரம்ப் கூறியுள்ளார். இந்த தாக்குதல் மிகவும் வேகமாகவும் மிகவும் கடினமாகவும் இருக்கும். அமெரிக்கா இனி அச்சுறுத்தல்களை விரும்பவில்லை என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். 
 
முன்னதாக, ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே, அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில், ஈரானின் 2-வது சக்தி வாய்ந்த நபராக கருதப்பட்ட ராணுவ தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டார்.

இந்த தாக்குதலில், அவருடன் ஈராக் துணை ராணுவ தளபதி அபு மஹதி அல் முகந்திஸ் மற்றும் 6 பேரும் கொல்லப்பட்டனர்.  அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால்,

மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. அமெரிக்காவை பழி தீர்ப்போம் என்று ஈரான் வெளிப்படையாக அறிவித்துள்ளது.

மேலும், ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் அமெரிக்க ராணுவ முகாமை குறிவைத்து ஈரான் ராணுவத்தின் காத்ஸ் பிரிவு இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது. 

.