This Article is From Jul 23, 2018

​​'எப்பொழுதும் அமெரிக்காவை மிரட்ட துணியாதீர்' - ருஹானிக்கு டொனால்ட் டிரம்ப்!

டிவிட்டரில், ஈரான் அதிபர் ஹசன் ருஹானியின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் கோபமாக ஒரு ட்வீட்டை பதிவு செய்திருந்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

​​'எப்பொழுதும் அமெரிக்காவை மிரட்ட துணியாதீர்' - ருஹானிக்கு டொனால்ட் டிரம்ப்!

ஞாயிற்றுக்கிழமை அன்று டிவிட்டரில், ஈரான் அதிபர் ஹசன் ருஹானியின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் கோபமாக ஒரு ட்வீட்டை பதிவு செய்திருந்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். இஸ்லாமிய குடியரசுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரப்படுத்தி வரும் நிலையில், இந்த ட்வீட் எல்லோரது கவனத்தையும் பெற்றுள்ளது.

“இனி எப்பொழுதும் அமெரிக்காவை மிரட்ட துணியாதீர், இல்லையேல் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். வன்முறையும், மரணமும் நிறைந்த உங்களது முட்டாள்தனமான வார்த்தைகளை இனிமேலும் பொறுத்துக்கொள்ளும் நாடாக அமெரிக்கா இருக்காது. ஜாக்கிரதையாக இருங்கள்” என ஈரான் அதிபர் ஹசன் ருஹானிக்கு நேரடியாக ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளார் டிரம்ப். இதற்கு முன்னர், ஈரான் அதிபர் ஹசன் ருஹானி கடந்த ஞாயிறன்று “சிங்கத்தின் வாலுடன் விளையாடாதீர்கள். ஈரானுடன் மோதினால், அதுவே நீங்கள் இதுவரை பார்த்த மிக மோசமான போராக இருக்கும்” என டிரம்பிற்கு ட்வீட் செய்திருந்தார்.

இந்த ட்விட்டர் சண்டை, கடந்த ஆண்டு வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன் மற்றும் டிரம்ப் ஆகியோரிடையே நடந்த உரையாடலை நினைவுபடுத்துகிறது. சமீபத்தில் கடந்த மாதம், கிம் ஜாங் மற்றும் டிரம்ப் சந்தித்த பின் எல்லாமே தலைகீழ் ஆகிப்போனது. அமெரிக்காவிற்கும் அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் வட கொரியாவிற்கும் இடையே நல்லிணக்கம் ஏற்பட்ட பின், டிரம்பிற்கு மிக பிடித்த இலக்காக ஈரான் ஆனது.

அமெரிக்கா, பிரிட்டன், சீனா, ஃபிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் இணைந்து ஈரானின் அணு ஆயுத திட்டம் மீதான தடைகளுக்கு ஈடாக பொருளாதாரத் தடைகளை உயர்த்தி தெஹ்ரானுடன் கையெழுத்திட்ட ஒப்பந்தம் ஒன்றிலிருந்து கடந்த மே மாதம் அமெரிக்காவை விடுவித்துள்ளார் டிரம்ப். ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கிறது எனும் அச்சத்தின் எதிர்வினையாகவே 2015ஆம் ஆண்டு ஒப்பந்தம் இருந்தது.

‘ஈரான் தனது ஏவுகணை திட்டத்தையும், ஏமனில் இருந்து சிரியா வரையிலான பிராந்திய மோதல்களில் தலையீடுகளையும் நிறுத்தினால், அமெரிக்கா அதன் புதிய தடைகளை உயர்த்தும்’ என வாஷிங்டன் மாகாண செயலர் மைக் பாம்போ கூறியுள்ளார்.

பாம்போ பேசுவதற்கு சில மணிநேரம் முன்னால், ஒரு தொலைக்காட்சி பேச்சில் “ஈரானிய மக்களை அவர்களின் சொந்த பாதுகாப்பு மற்றும் நலன்களுக்கு எதிராக நீங்கள் தூண்டிவிட முடியாது” என கூறியிருந்தார் ருஹானி.

4readvi4

சர்வதேச எண்ணெய் விநியோகங்களுக்கான முக்கிய கப்பல் பாதையான ஹார்முஸ் நீரிணை மூடப்படும் என்கிற மிரட்டலை தொடர்ந்து முன்வைத்தார் ருஹானி. “ஈரானுடனான அமைதி, எல்லாவற்றையும் விட அதிக அமைதியை உங்களுக்கு அளிக்கும். ஈரானுடன் மோதினால், அதுவே நீங்கள் இதுவரை பார்த்த மிக மோசமான போராக இருக்கும்.” என்றும் கூறியிருந்தார்.

mike pompeo reuters

சனிக்கிழமையன்று ஈரானின் முக்கிய தலைவர் ஆன அயத்தொல்லா அலி கமெனியே, “அமெரிக்கா, ஒப்பந்தங்களின் படி நடந்து கொள்ளாது” என்று கூறினார். “நான் முன்பு கூறியதுபோல், அமெரிக்காவின் வார்த்தைகளிலும் அவர்களின் கையெழுத்துக்களிலும் நாம் நம்பிக்கை கொள்ள முடியாது. எனவே, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் பயனற்றவை.” என்றும் கூறினார் அயத்தொல்லா.

ஞாயிறன்று இஸ்லாமிய குடியரசின் எதிர்ப்பாளர்களுக்கு வாஷிங்டனின் ஆதரவை உறுதிப்படுத்தினார் பாம்போ. "ஈரானில் ஆட்சி என்பது அம்மக்களுக்கு ஒரு கனவாகவே இருந்து வருகிறது" என்று அவர் கூறினார்.

donald trump kim jong un

வாஷிங்டனின் உயர்மட்ட தூதரான அவர், ஈரானில் தொலைக்காட்சி, வானொலி மற்றும் சமூக ஊடகங்களில் 24 மணி நேர பாதுகாப்புடன் ஒரு மல்டிமீடியா சேனலைத் தொடங்குவது என ஒரு தீவிரமான அமெரிக்க பிரச்சார நடவடிக்கையை அறிவித்தார். ஈரான் மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள சாமானிய ஈரானியர்களுக்கு ஆதரவாக அமெரிக்கா இருப்பதை இது உறுதி செய்யும் என்றும் அவர் கூறினார்.

iran oil reuters

ஈரானில் ஆட்சி மாற்றத்திற்கு ஆதரவாக இருப்பதால், இஸ்லாமிய குடியரசுகளில் மிதவாதிகள் மற்றும் தீவிரவாதிகள் இடையே வேறுபாடு காண முடியவில்லை என்றும் அவர் கூறினார் பாம்போ.

“ஈரான் மற்றும் உலகளாவிய ரீதியில், இந்த ஆட்சி அர்த்தமுள்ள மாற்றங்களை செய்யும் என்பதே எங்கள் நம்பிக்கை” என்று கூறினார்.

.